சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது! அடடே இப்படி வளர்ந்துட்டாங்களே!
Siruthai Photos-சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகின்றது.;
Siruthai Photos-சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான படம் சிறுத்தை. இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஒரு கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். இன்னொரு கார்த்தி வீர தீர போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார். அவருக்கு ஒரு குழந்தை இருக்கும். அந்த குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ரக்சனா. இந்த குழந்தை தற்போது 12வது படிக்கும் இளம்பெண்ணாக இருக்கிறார்.
கார்த்தியின் மகளாக நடித்த ரக்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களைப் பார்த்த பலரும் இவரை எங்கோ பார்த்த நினைவிருக்கிறதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இவரை அடையாளம் கண்டுகொள்கின்றனர்.
சிறுத்தை படம் மட்டுமின்றி, கடல், ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் ரக்சனா. அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, படிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இவரின் நீண்டநாள் ஆசையாம். அதற்காகவும் பல முயற்சிகளை எடுத்து தற்போது நடன பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.
படிப்பு முடிந்தவுடன் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக கூறியுள்ள ரக்சனா, தனது வீட்டில் இதற்கு முழு ஆதரவும் கிடைக்கும் என்று நம்புவதாக கூறியிருக்கிறார்.
சிறுத்தை படத்தில் கார்த்தியுடன் நடித்ததைப் பற்றியும் பேசியிருந்தார் ரக்சனா. அவர் கூறும்போது கார்த்தி மிகவும் மென்மையானவர் எளிமையானவர் பழகுவதற்கு இயல்பான மனிதர் நிறைய கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார். கார்த்தி ரக்சனாவின் பிறந்தநாளுக்கு பரிசுடன் சென்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இதனை தன்னால் மறக்கவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ரக்சனா.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2