அன்பு, ஆனந்தி காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா அம்மா?
சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.;
சிங்கப்பெண்ணே சீரியல் புரோமோ | Singapenne serial today promo
சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள். வாட்ஸ்அப்பில் இணைய
சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial written update
அன்பு அம்மா - பரவால்லம்மா நான் பாத்துக்குறேன். சரிம்மா நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நா பாத்துக்குறேன்.
யாழினி - அம்மா அவங்க வீட்டு விஷேசத்துக்கு போயி நல்லா வேல பாத்துட்டு வந்தியே
அன்பு அம்மா - அவங்க சொல்றத சொல்லிட்டு போறாங்க. நாம செஞ்சத சொல்லிக்காட்டக்கூடாது.
ஆனந்தி - நா இருக்கேன் மா. வாங்க சமைக்கலாம். இவங்களும் ஒத்தாசைக்கு இருக்காங்க. எங்க ஊர்ல 100 பேருக்கு கூட சமச்சிருக்கேன்.
அன்பு - அம்மா ஆனந்தி நல்லா சமைப்பாம்மா. அவ சமைக்கட்டும்.
அன்பு அம்மா - அப்ப நாம கொல்லைல சமைச்சுக்கலாம்.
ஆனந்தி - சௌந்தர்யா நீ பருப்ப ஊற வை, அக்கா நீங்க அரிசிய ஊற வைங்க
அன்பு - அப்ப நா என்ன செய்ய
ஆனந்தி - நீங்க சும்மா இங்க நில்லுங்க
யாழினி - நானும் இங்க நிக்குறேன்.
அன்பு ஆனந்தி காலை தவறுதலாக மிதித்துவிடுகிறான். அப்போது அவர்கள் கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள் வருகிறார்கள்.
சமையல் வேலை தடபுடலாக நடந்தேறுகிறது. அனைவரும் பகிர்ந்து வேலையைத் தொடங்கி செய்கிறார்கள்.
அப்போது ஆனந்திக்கு வியர்த்து கொட்டுகிறது. அந்த நேரத்தில் அன்பு தனது கைக்குட்டையை எடுத்து கொடுக்கிறான். பின் அவனே துடைத்து விடுகிறான். அங்கே முத்து தனது பங்குக்கு கலாட்டா செய்துகொண்டிருக்கிறான்.
அன்பு அம்மா - என்ன எல்லாரும் வேலைய சீக்கிரம் முடிச்சிட்டீங்களா. என்ன உங்க எல்லாரையும் வேல வாங்கிட்டோமேன்னு கஷ்டமா இருக்கு.
ஆனந்தி - எங்கள வேற்று ஆளா நினைக்காதீங்கம்மா.
அனைவரும் பூஜையில் கலந்துகொள்கிறார்கள். தீபாராதனை காட்டி அன்பு ஆரத்தியை அனைவருக்கும் கொண்டு நீட்டுகிறான்.
ஆனந்தி - அன்பு நீங்க சாமிகும்புடுற முன்னாடியே குடுக்கலாம்னுதான் எடுத்துட்டு வந்தேன். ஆனா சமைக்குற அவசரத்துல மறந்துட்டேன். என்னால முடிஞ்ச ஒரு சின்ன பரிசு. உங்களுக்கும் அம்மாவுக்கும்.
அன்பு - அம்மா இதோ இத பிரிச்சி பாரு. நான் பக்கத்துலேயே இருக்கேன்.
ஆனந்தி அன்புவின் குடும்ப புகைப்படத்தை வரைந்து அப்படியே கொடுக்கிறாள். இதைப் பார்த்து அப்படியே நெகிழ்ந்து விடுகிறது அன்புவின் குடும்பம்.
அன்பு அம்மா - தொலைஞ்சு போன இந்த குடும்பத்து பொக்கிஷத்த எனக்கு திரும்ப குடுத்துருக்க. உனக்கு சின்ன வயசுன்னாலும், உன் கால்ல விழுந்துடலாம் போல இருக்கு.
ஆனந்தி - நான்தான் உங்க கால்ல விழணும் அம்மா.
அன்பு தன் அப்பா தன்னிடம் பேசுவது போல நினைத்து பார்க்கிறான்.
முத்துவும் சௌந்தர்யாவும் சாப்பாடு குறித்து பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அதனால் சௌந்தர்யாவை அனைவரும் கலாய்க்கிறார்கள். இப்போது அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்படுகிறது.
சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial update today
அனைவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறுகிறான் அன்பு. அவனுக்கு உதவியாக முத்து, ஆனந்தி, ஜெயந்தி ஆகியோரும் பரிமாறுகிறார்கள். அன்புவின் தங்கை யாழினி தனக்கு பசிக்கிறது எனவும், சாப்பிட வேண்டும் எனவும் கேட்க, அன்பு அதற்கு சம்மதிக்கிறான்.
அன்புவும் ஆனந்தியும் முட்டிக்கொள்ள, ஆனந்தியையும் அன்புவையும் பார்த்து முத்துவும், ஜெயந்தியும் பேசிக்கொள்கிறார்கள். அதனை கவனித்த அன்பு அவர்களையும் உக்காந்து சாப்பிடச் சொல்லுகிறான். ஆனந்தியும் அன்புவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அன்புவின் அம்மா அன்புவை அழைத்து படையல் சாப்பாட்டை சாப்பிடச் சொல்கிறார். அன்பு முழுச்சாப்பாட்டையும் என்னால் சாப்பிட முடியாது என்கிறான் அன்பு. முழுச்சாப்பாட்டையும் சாப்பிட யார் சொன்னது. உன் தங்கச்சி யாழினியை சாப்பிடச் சொல்லு என்று கூறுகிறாள் அம்மா.
சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial today episode
விரைவில் அப்டேட் செய்யப்படும்
சிங்கப்பெண்ணே நேற்றைய எபிசோட் | singapenne serial yesterday episode
ஆனந்தியையும் அவரது தோழிகளையும் திட்ட போகிறார் என்று நினைத்தால் வார்டன் ஆனந்தியை அவரது தோழிகள் அறையிலேயே தங்க வைக்க சம்மதித்துவிட்டார். இதனால் பல்பு வாங்குகிறாள் மித்ரா.
மித்ரா, அலுவலகத்தில் மகேஷை பார்க்க வருகிறாள். இருவரும் பரஸ்பரம் ஹாய் சொல்லிக்கொண்டு, மித்ரா தனது பேச்சைத் தொடங்குகிறாள். ஆனந்தி மேல எனக்கு அக்கறை இல்லையா. நீ ஆனந்தியை லவ் பண்ற அதனால அவள மாட்டிவிட நானே நினைப்பேனா சொல்லு. ஆனந்திய அரெஸ்ட் பண்ணிட்டு போகறப்ப எனக்கு கஷ்டமா இல்லையா.
ஆனந்திய எல்லார் கூடயும் குளோஸா பழகுறத வேண்டாம்னு சொல்லு. அவ இப்ப கூட அன்பு கூட குளோஸா பழகுறா. உனக்கு எப்படி ஆனந்திய புடிச்சிருக்கோ அதேமாதிரி அன்புவுக்கும் ஆனந்திய பிடிச்சிருக்கலாம்ல என்று மித்ரா சொன்னவுடன் மகேஷுக்கு அதிர்ச்சியடைகிறான். கோபத்தில் கத்துகிறான்.
ஆனந்தியோட அப்பா அம்மா உன்மேல வச்சிருக்குற அன்பு போல அன்பு மேலயும் ரெஸ்ட் பெக்ட் வச்சிருக்காங்க. அவங்கள பொறுத்தவரைக்கும் ஆனந்தியும் அன்புவும் ஒன்னுதான். அவங்க அப்படித்தான் நினைக்குறாங்க. அதனாலதான் சொல்றேன் ஆனந்திய எல்லார்கூடயும் சகஜமா குளோஸா பழக விடாத. அததான் நான் சொல்றேன் என்கிறாள் மித்ரா.
அந்த பிண்டத்த எடுத்துக்கோங்க. இத அப்படியே 3 உருண்டையாக பிடிங்க என ஐயர் சொல்ல, அதை அன்பு அப்படியே செய்கிறான். அங்கு அன்புவின் அம்மா, தங்கை இருவரும் நிற்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு முத்துவும் ஜெயந்தி அக்காவும் சௌசௌவும் வருகிறார்கள். அவர்களிடம் அன்பு நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்களா என்கிறான்.
ஏன்டா முத்து யார தேடுறான் இவன் என அன்புவின் அம்மா கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்ல என அன்பு சொல்ல, அந்த நேரத்தில் ஆனந்தி வெளியத் தான் நிற்கிறாள் வரச்சொல்லுங்க என சொல்ல, அன்பு மகிழ்கிறான். அம்மாவே ஆனந்தியை வரவழைச்சிருக்காங்க என்று சௌசௌ உளறிக்கொட்டுகிறாள். சர்ப்ரைஸ் உடைந்ததால் ஆனந்தி அன்பு வீட்டுக்கு வருகிறாள். அவளைப் பார்த்து அன்பு லைட்டாக சிரிக்க ஆரம்பிக்கிறான். ஆனந்தியும் சிரிக்கிறாள்.
யாழினி, தன் அண்ணன் அன்புவை கிண்டல் செய்கிறார். பாத்தியா முத்தண்ணே உன் ஃபிரண்ட் முகத்துல 1000 வால்ட் பல்பு எரியுது என்று சொல்கிறாள். அதற்கு முத்துவோ ஆமா இல்லையா பின்ன உங்க அம்மாவே ஆனந்திய கூப்பிடுவாங்கன்னு நினச்சி கூட பாக்கல.
அதான் பத்தாயிரம் வால்ட் ஷாக் அடிச்சமாதிரி ஷாக்குலேயே இருக்கான். அடுத்ததாக அனைவரும் சாமி கும்பிடுகிறார்கள். பூவை எடுத்த அப்பா படத்துக்கு போடச் சொல்கிறார்கள். ஒவ்வொருவராக பூக்களை அப்பா படத்துக்கு போட்டு சாமி கும்பிடுகிறார்கள். நீ எப்பம்மா ஆனந்திய மீட் பண்ண என அன்பு அம்மாவிடம் கேட்க, அதற்கு பழைய பிளாஸ்பேக்கை சொல்லுகிறாள் அம்மா.
அம்மா உனக்கு ஒன்னும் ஆகலல என்று சொல்கிறான் அன்பு. அதற்கு அம்மா அதான் ஆனந்தி வீட்டு வரைக்கும் வந்து விட்டுட்டு போனாளே. ஆனந்திய நானே கூப்பிட்டேன்டா என்கிறாள் அம்மா.
எப்படியோ இருவரும் சமாதானம் ஆகிவிட்டீர்களே என்கிறான் அன்பு. ஆனந்தி அன்புவைப் பார்த்து சிரிக்கிறாள். அதற்கு ஏன் என கேட்கிறான் அன்பு.
நீங்க இன்னும் சட்டை போடல என்பது போல சொல்கிறார். அதற்கு தாங்க்ஸ் சொல்கிறான் அன்பு. அப்போது முத்து பிண்டத்தை பசு மாட்டுக்கு போட சொல்கிறார் என்று சொல்ல, அன்புவும் வெளியில் சென்று போடுகிறான். அப்போது அம்மா டீ போட்டு எடுத்துக் கொள்ள சொல்கிறார். நாங்க மூன்று பேரும் விரதம், நீங்க 3 பேரும் குடிங்க என்கிறார்.
முத்துவுக்கும் யாழினிக்கும் இடையில் சின்னதாக ஒரு செல்ல சண்டை ஏற்படுகிறது. அந்த நேரம் பார்த்து அன்பு அம்மாவின் தோழிகள் இருவர் வருகிறார்கள். அவர்கள் சமைக்கமுடியாது என்று சொல்ல, ஆனந்தி சமைக்க தயாராகிறார். இதனால் அன்பு சந்தோஷப்படுகிறான்.