வார்டன் கொடுத்த டிவிஸ்ட்..! மித்ராவுக்கு கிடைத்த பல்பு..!

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் குறித்து காண்போம்.;

Update: 2024-07-06 13:00 GMT

சிங்கப்பெண்ணே சீரியல் புரோமோ | Singapenne serial today promo 

விரைவில் அப்டேட் செய்யப்படும்

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial written update

சைக்கிளில் அன்பு அம்மா கொண்டு வந்த காய்கறிகளை எடுத்துச் செல்கிறாள் ஆனந்தி. இருவரும் சைக்கிளை உருட்டிக்கொண்டே வீடு வரை நடந்து செல்கின்றனர். வீட்டுக்கு அருகே வந்ததும் நானே வீட்டுக்கு கொண்டு வந்து தரேன் என்கிறாள் ஆனந்தி. ஆனால் அதற்கு அன்புவின் அம்மா வேண்டாம் என மறுத்துவிட்டு, உள்ளே வாம்மா வந்து ஒரு கிளாஸ் தண்ணீராச்சும் குடிச்சிட்டு போ என்கிறார் அம்மா.

அன்புவோட அப்பாவுக்கு நாளை திதி இருக்கிறது என்றும் மறக்காமல் வந்து கலந்துக்கிட்டு சாப்பிட்டு போகணும் என அன்புக் கட்டளை இடுகிறாள். ஆனந்தியும் மகிழ்ச்சியுடன் நாளை வருவதாக வாக்கு கொடுத்துவிட்டு செல்கிறாள். அன்புவின் அம்மாவுக்கும் ஆனந்தி மீது நல்ல அபிப்ராயம் ஏற்படுகிறது.

அரவிந்த், மித்ரா இருவரும் சேர்ந்து மகேஷின் அப்பாவை நேரில் சந்திக்க செல்கிறார்கள். நடந்ததைக் கூறி, அப்பாவிடம் முறையிடுகிறான். மித்ராவை மகேஷ் சஸ்பெண்ட் செய்துவிட்டதாக கூறுகிறான். இதனால் மகேஷின் அப்பா வருத்தப்படுகிறார். இதனால் குழப்பத்தில் ஆழ்கிறார் மகேஷின் அப்பா. அந்த நேரத்தில் மகேஷ் அங்கு வந்து சேர்கிறான்.

நோ டேட். இவங்க என்ன சொன்னாலும் சரி, மித்ராவோட சஸ்பெண்ஸன கேன்சல் பண்ண முடியாது என்கிறான். அந்த நேரம் மித்ராவும் தன்னை நிரபராதி என்கிறாள். தவறுதலாக நடந்த விசயத்தை வைத்து சஸ்பென்ட் பண்ணுவது எப்படி நியாயம் என்கிறாள். மகேஷின் முடிவை மறுபரிசீலனை செய்ய அப்பா சொல்கிறார். இதனால் அரவிந்த், மித்ரா இருவரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

மித்ரா நம்ம கம்பெனிக்காக டே அன்ட் நைட் உழைப்ப போட்டுருக்கிறாள். அவளை ரீஜாய்ண் பண்ண சொல்லு என்கிறார். மகேஷும் அந்த முடிவை சரி என்று உணர்ந்து, மகேஷும் மித்ராவை திரும்ப கம்பெனிக்கு வரச் சொல்லிவிடுகிறான்.

ஆறு மனமே ஆறு எனும் பாடலோடு ஆனந்தியின் ஹாஸ்டல் காண்பிக்கப்படுகிறது. அங்கே வார்டன் அம்மா ஆனந்தி ரூமுக்கு சென்று பார்க்கிறாள். அங்கு ஆனந்தி இல்லை என்பதை அறிந்து ஷாக் ஆகிறார். உடனே செக்கியூரிட்டியை அழைத்து, ஆனந்தி பற்றி விசாரிக்கிறாள். இதனால் வார்டனுக்கு ஆனந்தி தன் தோழிகளுடன் தூங்குவதாக யோசிக்கிறாள்.

அடுத்ததாக ஒரு கூட்டுக் கிளியாக பாடல் ஒலிக்க, வார்டன் ஏதோ நினைக்கிறாள். தோழிகளை பிரித்தது சரியில்லை என்பதை உணர்வதாக தெரிகிறது.

மித்ராவை டிராப் செய்ய அரவிந்த் காரில் அழைத்து வருகிறான். மித்ராவிடம் தற்போது அரவிந்த் இப்ப ஹேப்பிதானே என்கிறார். ஆனால் அரவிந்திடம் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறாள் மித்ரா. அன்பு மீது அளவுகடந்த கோபத்தை கொந்தளிக்கிறாள்.

ஆனந்தி அவளது தோழிகள் அறையில் தூங்கி காலையில் எழுந்திருக்கிறாள். அப்போது வார்டன் நினைவு வருகிறது. அந்த நேரத்தில் மித்ராவின் தோழிகள் அந்த அறை நோக்கி வருகிறார்கள். 

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial update today

இப்ப மேடம் கேட்டா என்ன சொல்ல என நான்கு பேரும் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது பார்த்து அங்கே வார்டன் மேடம் வந்து நிக்கிறார். இதனால் நால்வரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இவரை அழைத்துக் கொண்டு வந்தது மித்ரா. இதனால் நால்வருக்கும் என்ன ஆகப் போகுதோ என்கிற பயம். பாத்தீங்களா மேடம் உங்கள் பேச்சை நால்வரும் மதிக்கவே இல்லை என ஏத்தி விடுகிறாள் மித்ரா. உடன் மித்ராவின் நண்பர்களும் ஏத்திவிடுகிறார்கள். 

ஆனந்தியின் தோழிகள் மூவரும் நாங்கள்தான் ஆனந்தியை அழைத்தோம். எந்த தண்டனை என்றாலும் எங்களுக்கு கொடுங்கள். ஆனந்தி பாவம் என்று கூறுகிறார்கள்.

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் | singapenne serial today episode

ஆமா மேடம் ஆனந்தி மேல எந்த தப்பும் இல்ல மேடம்.

எந்த பனிஸ்மெண்ட் கொடுக்கறதா இருந்தாலும் எங்களுக்கு தாங்க மேடம்

பாத்தீங்களா மேடம் அவங்களே அவங்க தப்ப ஒத்துக்கிட்டாங்க. கடுமையான தண்டன குடுங்க மேடம்

வார்டன் மேடம், ஏதோ சொல்ல வர அதற்குள் மித்ரா முந்திக்கொண்டு, நிற்கிறாள். 

ஆனந்தி இனிமேல் பர்மணெண்ட்டாக அவங்க கூட அவங்க ரூம்லதான் தங்குவா என வார்டன் சொல்கிறார். இதனால் நால்வரும் மகிழ்ச்சியடைந்தனர். மித்ராவும் அவரது நண்பர்களும் அதிர்ச்சியடைகின்றனர்.

சிங்கப்பெண்ணே சீரியல் எபிசோட் ஜூலை 5, 2024 | singapenne serial episode July 5, 2024

அன்புவின் நண்பன் அவன் மொபைலை கேட்கிறான். ஆனால் அன்புவோ தரமறுக்கிறான். இதனால் நண்பன் செல்லமாக கோபப்படுகிறான். ஆனந்தி தன்னை கேள்வி கேட்பாளே என்று யோசிப்பதுடன், அவனுடன் இருக்கும் வாண்டுவும் தன்னை அவமானப்படுத்துவானே என்று யோசிக்கிறான்.

அந்த நேரத்தில் ஒரு அழைப்பு வருகிறது. யார் என்று அன்பு கேட்க, அதனை சொல்லமுடியாது என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக வெளியே வருகிறான் முத்து.

போனில் ஆனந்தி பேசுகிறாள். முத்து அண்ணே ஃபோட்டோ கிடச்சிதா என்று கேட்க, நடந்ததை கூறுகிறான் முத்து. தன்னிடம் ஃபோனைக் காட்டவே மாட்டேங்கிறான். தரமாட்டேன் என அசிங்கப்படுத்துகிறான் என்று கூறுகிறான் முத்து.

பேசாம உண்மையைச் சொல்லிடவா என்று முத்து கேட்க, அதற்கு ஆனந்தி வேண்டாம் என்கிறாள். இதனால் டென்சன் ஆகும் முத்து, பின்ன என்னத்தான் பண்ண சொல்ற என்று கேட்கிறான். அதற்கு ஆனந்தி அந்த கோள்மூட்டி புள்ள இருக்குல்ல அதுக்கிட்ட கேட்கலாமா என்கிறாள். மீண்டும் டென்சன் ஆகும் முத்து, கோள்மூட்டியா நீ வேற சும்மா இரும்மா காதுல கீதுல விழுந்துட போகுது என்கிறான் முத்து.

அதற்கு ஆனந்தி ஏன்ண்ணே, கோள்மூட்டிங்குறது செல்லப்பேரு தானே என்கிறாள். முத்துவோ கோள்மூட்டினு கூப்பிட்டா ஃபோன் கிடைக்காது. கண்ட கண்ட வார்த்தைல திட்டுதான் கிடைக்கும்னு சொல்றான் முத்து. எப்படினாலும் பரவால எப்படியாச்சும் ஃபோட்டோ வாங்கிட்டு வாங்கண்ணே என்கிறாள் ஆனந்தி.

யாழினி என்று அன்புவின் தங்கையை அழைக்கிறான். அப்போது அங்கு வரும் அன்பு ஏன் அவ ஃபோனை கேக்குற என்று கூறுகிறான். அதற்கு நீதான் ஃபோன் தரமாட்டேன்னு சொல்லிட்ட அவ தர்றா உனக்கென்ன என்கிறான். அப்போது அங்கு வரும் அன்புவின் அம்மா, உப்புமா சாப்பிட்டு போகச் சொல்கிறாள். ஆனால் முத்து, அதை கோந்து என்று கலாய்த்துவிட்டு செல்கிறான்.

அரவிந்தும், மித்ராவும் தனியே சந்தித்து பேசிக்கொள்கிறார்கள். மகேஷ் மித்ராவை வெளியேற்றியதை நினைத்து வருத்தப்படுகிறாள். என்னை சாதாரண சூப்பர் வைசர் சஸ்பெண்ட் பண்ணிருக்கான். என் மானம் போச்சு, மரியாதை போச்சு என அழுது புலம்புகிறாள்.

அரவிந்த் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். அன்பு எல்லாம் ஒரு ஆளே இல்ல. மகேஷ் சப்போர்ட் பண்றதாலதான் அவன் கேபினுக்குள்ளேயே வரான். அவன கம்பெனி விட்டே தூக்குறேன் பாரு என்கிறான். இதை சொல்லாத அரவிந்த் செஞ்சு காமி என்கிறாள் மித்ரா. அடுத்து மித்ராவை அரவிந்த் அழைத்துச் செல்கிறான்.

ஆனந்தி சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அங்கே ஒருவன் பைக்கில் தாறுமாறாக செல்கிறான். அந்த நேரத்தில் அங்கு அன்புவின் அம்மா மார்க்கெட் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்துவிட்டு அன்பு அம்மா வராங்க என்று சொல்லி வண்டியை நிறுத்துகிறாள். அப்போது அதே பைக் ஆசாமி வேகமாக வருகிறான். 

Tags:    

Similar News