சிங்கப்பெண்ணே சீரியலில் வந்த மாற்றம்! இனி காத்திருக்கணுமா?

சிங்கப்பெண்ணே சீரியல் இனி அதிகாரப்பூர்வமாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.;

Update: 2024-06-08 06:30 GMT

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றம் ஒன்று வந்திருக்கிறது. இதுவரை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், இனி வரும் வாரம் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

சன்டிவி சீரியல்களுக்கு பிரபலமானது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பியிலும் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வருகிறது. சன்டிவியுடன் போட்டிக்கு வந்த விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல்கள் சிறப்பாக இருந்தாலும் சன்டிவி அளவுக்கு டிஆர்பிகளில் இடம்பிடிக்க முடியவில்லை. டாப் 10 டிஆர்பி லிஸ்ட் எடுத்தாலும்கூட அதில் 7 முதல் 8 சீரியல்கள் சன்டிவியுடையதாகவே இருக்கின்றன. அந்த வகையில் சன்டிவி சீரியல்களில் ஒன்றான சிங்கப்பெண்ணே தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

சிங்கப்பெண்ணே சீரியல் இனி அதிகாரப்பூர்வமாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் முடிவடைய இருக்கும் நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை சிங்கப்பெண்ணே ஒளிபரப்பாகி வந்த 8 மணி ஸ்லாட்டில் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

மருமகள்

சன்டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் தொடர் மருமகள். கேப்ரியல்லா நடிக்கும் இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News