சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!

அன்பு, ஆனந்தி காதல் ரூட் கிளியர்.. இனி சிங்கப்பெண்ணே சீரியல் கதை இப்படித்தான் இருக்கப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-06-18 15:38 GMT

சிங்கப்பெண்ணே இன்றைய புரோமோ - ஜூன் 19

விரைவில் அப்டேட் செய்யப்படும்

சிங்கப்பெண்ணே நேற்றைய எபிசோட் - ஜூன் 18

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் குடும்பத்தினரான அவரது அப்பா, அம்மா, அக்கா மூவரும், ஆனந்தியின் நண்பர்கள் 3 சிண்டுகளும் சென்னைக்கு வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டிருந்த அன்பு, அவனுக்கு உதவி செய்யும் மகேஷ், ஆனந்தியின் நண்பர்கள், ஹாஸ்டல் வார்டன் என சென்ற வாரம் முழுக்க ஜாலியாக சென்ற தொடர், இந்த வாரம் காதல் வாரம் என மாற இருக்கிறது.

ஆனந்தியின் குடும்பத்துக்காக பல விசயங்களைப் பார்த்து பார்த்து செய்யும் அன்புவைப் பார்த்து ஆனந்திக்கு ஒருவித உணர்வு ஏற்படுகிறது. இவர் ஏன் தனக்காக இப்படி உதவுகிறார். பார்த்து பார்த்து நல்லது செய்கிறார் என ஆனந்தி யோசிக்க ஆரம்பிக்கிறார். இதனால் இவருக்குள்ளும் அன்பு மீது ஒருவித காதல் ஏற்படுவதாகவே தோன்றுகிறது.

புரோமோவில் ஆனந்தியுடன் அன்பு நடனம் ஆடுவது போல காட்டியிருக்கிறார்கள். இது எப்படியும் கனவாகதான் இருக்கும் என்றாலும் இனி ஆனந்தி, அன்பு காதல் காட்சிகள்தான் இந்த வாரம் முழுக்க ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

கடந்த வார எபிசோட் ரிவியூ:

ஆனந்தியும் அவளின் காதலனான அழகனும் சேர வேண்டும் என அவளது நண்பர்கள் விருப்பப்பட்டாலும், உண்மையான அழகன் அன்புதான் என தெரியவரும் நாள் எப்போது என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே நந்தா, அழகனாக நடித்து ஆனந்தியை அடைய நினைத்தான். ஆனால் அதை சரியான நேரத்தில் அன்பு தடுத்து நிறுத்தி அவளைக் காப்பாற்றினான். அதுவரை அன்பு மீது எரிந்து விழுந்துகொண்டிருந்தார் ஆனந்தி. இதனால் ரசிகர்கள் ஆனந்தியை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அன்பு மீதான உண்மையான அன்பை தெரிந்துகொண்டுள்ளார்.

ஆனந்தியின் குடும்பத்தோடு பீச், பார்க், துணிக்கடை என சுற்றிக்கொண்டிருக்கும் அன்பு, அவளுக்கு மட்டுமின்றி மொத்த குடும்பத்துக்கும் துணி எடுத்து கொடுக்கிறான். அன்பு எடுத்துக் கொடுத்த துணியை அணிந்துதான் ஆனந்தியும் குடும்பமும் தீம் பார்க்கிற்கு செல்கிறது.

ஆனந்தி, அன்புவிடம் கடுமையாக நடந்துகொண்டதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டாள். இவ்வளவு வெறுப்பு காட்டியும் என்மீது அன்பு மட்டுமே காட்டுறீங்களே எப்படி ஏன் என்று கேட்ட ஆனந்திக்கு அன்பு கொடுத்த பதில் பார்க்க அழகாக இருந்தது.

சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட் - ஜூன் 19

விரைவில் அப்டேட் செய்யப்படும்.

Tags:    

Similar News