நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்

Simbu Marriage Date -நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் செய்ய பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்கள் என்பதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாக்.;

Update: 2022-08-30 07:45 GMT

நடிகர் சிம்பு (பைல் படம்)

Simbu Marriage Date -கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆவதால் சிம்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிம்பு திருமணம் குறித்த தகவல்களும் தற்சமயம் வெளியாகியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் சிம்புவின் தந்தை டிஆர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையில், சிம்புவுக்கு அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

தங்கை பிருந்தா, தாய் உஷா, தந்தை டி.ஆர்., இணைந்து தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தை துவக்கி உள்ளனர். இதற்கு சிம்புவும் பச்சை கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது. சிம்புவிற்கு பார்க்கும் பெண் மயிலாடுதுறை பக்கமாக இருந்தால் டபுள் ஓகே என்கிறது சிம்பிவின் குடும்பம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News