STR 48 ஷூட்டிங் எப்போது துவங்குது? இதோ அப்டேட்!

சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்த வருடத்திலேயே சிம்புவுக்கு அடுத்த படமும் ரிலீஸ் ஆகும் என்று பேசப்பட்டு வருகிறது. முன்னதாக அவர் நடிப்பில் பத்து தல படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.;

Update: 2023-04-29 15:00 GMT

சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்த வருடத்திலேயே சிம்புவுக்கு அடுத்த படமும் ரிலீஸ் ஆகும் என்று பேசப்பட்டு வருகிறது. முன்னதாக அவர் நடிப்பில் பத்து தல படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. | simbu upcoming movie 2023

தமிழ் சினிமாவின் மிகவும் உறுதியான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அவர் படம் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் சர்ச்சையிலேயே சிக்கியிருந்தாலும் அவரை விட்டுக் கொடுக்காத ரசிகர்கள் அவருக்கு கிடைத்திருக்கிறார்கள். | simbu next movie 2023

ஆரம்பத்தில் சில சுமார் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த சிம்பு, பின் காதல் மற்றும் அதிரடி படங்கள் மூலம் டிராக்குக்கு திரும்பினார். கௌதம் மேனன் உள்ளிட்ட இயக்குநர்களின் படத்தில் மிகப் பிரமாதமாக நடித்து அசத்தும் சிம்பு, அஅஅ உள்ளிட்ட சில மொக்கை படங்களிலும் நடித்தார். | simbu upcoming projects 2023

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த சிம்புவா இது என ரசிகர்களே ஆச்சர்யப்பட்டு நிற்கும் அளவுக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தனது மார்க்கெட்டை கிட்டத்தட்ட ஜீரோவாக்கிவிட்டார். அவருக்கு இனி படம் கிடைக்காது ரெட் கார்டு என பேசப்பட்ட நிலையில், வந்தா ராஜாவாதான் வருவேன் என்கிற சூர மொக்கை படத்தில் நடித்து தான் கம்பேக் கொடுத்ததாக நம்பினார். ஆனால் அதன்பிறகு நிலை அறிந்து உடல் எடையைக் குறைக்க முடிவு செய்தார். | simbu next movie after pathu thala

மாநாடு படம் அவருக்கு கம்பேக்காக அமையும் என்று பேசப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடியே வெற்றியடைந்த அந்த படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படமும் அவருக்கு கைக்கொடுத்தது. அதன்பிறகு பத்து தல படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. | simbu kamal desingh periyasamy movie update

இந்நிலையில் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் இந்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தின் மூலம் கோலிவுட்டில் களமிறங்கிய தேசிங்கு, ரஜினிகாந்திடம் இந்த கதையைக் கூறிவிட்டு இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தார். | simbu 48 music director

லைகா, சன்பிக்சர்ஸ் இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த படத்தை தயாரிக்க முடியாது என இருவரும் கைவிரித்துவிட்டதால், ரஜினிகாந்த் இந்த படத்திலிருந்து நழுவிவிட்டார். அதனால் வேறு தயாரிப்பாளரைத் தேடிச் சென்றார் தேசிங்கு. அவருக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மகேந்திரனின் நட்பு கிடைக்க அதன் மூலம் இந்த படத்தை தயாரிக்க கமல்ஹாசனும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் தேசிங்கு - சிம்பு - கமல்ஹாசன் படம் ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 21ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. | simbu 48 latest update

கடைசியாக மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என மூன்று தொடர் வெற்றிகளைக் கொடுத்த சிம்பு இப்போது தேசிங்கு இயக்கத்தில் வரலாற்றுப் படத்தில் நடித்து வருவதால் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. | simbu desingh periyasamy

Tags:    

Similar News