கோவில்பட்டி திரையரங்கில் சித்தி இத்னானி! ரசிகர்கள் உற்சாகம்!
கோவில்பட்டியில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சித்தி இத்னானி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.;
கோவில்பட்டி திரையரங்கில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகை சித்தி இத்னானி.
குட்டிப்புலி, கொம்பன், விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா, நடிகை சித்தி இத்னானி நடித்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தமிழகம் முழுவதும் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டியில் காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சத்தியபாமா சினிமாஸ் (SBT) திரையரங்கிற்கு திடீரென வருகை தந்த நடிகை சித்தி இத்னானி அங்கிருந்த ரசிகர்களிடம் கலந்துரையடினார். அப்போது நடிகை சித்தி இத்னானி பேசியதாவது: இந்தப் படத்திற்காக மூன்று மாதம் கோவில்பட்டியில் தங்கியிருந்தேன். கோவில்பட்டி மக்களுடன் நல்ல நட்பு இருக்கிறது.
கோவில்பட்டி என்னுடைய வீடு போன்ற உணர்வு இருக்கிறது. கோவில்பட்டி மக்கள் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணாங்க, அவங்க வீட்டு பொண்ணு மாதிரி என்ன பாத்துக்கிட்டாங்க, கோவில்பட்டி மக்கள் தனக்கு ரொம்ப பிடிக்கும். இது உங்களுடைய படம், உங்கள் நண்பர்கள் குடும்பத்தினரிடம் சொல்லி திரையரங்குகளில் பார்க்கச் சொல்லுங்கள் , ரொம்ப ரொம்ப அனைவருக்கும் நன்றி, இது நம்ம படம், உங்களுடன் பேசியது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என நடிகை சித்தி இத்னானி பேசினார்.
பின்பு திரையரங்கில் இருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடிகை சித்தி இத்னானி சென்றார். காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்பதால் நடிகை சித்தி இத்னானியை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.