சிம்பு பட நடிகையை எதிர்க்கும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

தான் எந்த மதத்துக்கும் எதிரானவள் அல்ல எனவும் தி கேரளா ஸ்டோரியும் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை என போஸ்ட் போட்டிருக்கிறார். இந்த படம் வெறுப்பை உமிழும் படம் இல்லை எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் எனவும் கூறியுள்ளதால் ரசிகர்கள் பலர் இவர் மீது மேலும் கடுப்பாகியுள்ளனர்.;

Update: 2023-05-06 13:25 GMT

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சித்தி இதானி. இவருக்கு இதுவே தமிழில் அறிமுக படம். இதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே கேரளாவில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனாலேயே நெட்டிசன்களால் எதிர்க்கப்படுகிறார். இவருடன் நடித்த அடா சர்மாவையும் ரசிகர்கள் எதிர்த்து வருகின்றனர்.

பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் படத்தில் நடித்திருந்தார் அடா சர்மா. இவர்கள் இருவரையும் தமிழ் சினிமா ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். தமிழ், மலையாள படங்களில் இனிமேல் நடித்துவிடுவீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடா சர்மா தி கேரளா ஸ்டோரி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவருக்கு தோழியாக சித்தி இதானி நடித்திருக்கிறார்.

சித்தி இதானி சினிமாவில் அறிமுகமானது ஒரு குஜராத்தி படத்தின் மூலம்தான். லேட்டஸ்ட்டாக அவரது நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் வெளியானதிலிருந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதைத் தொடர்ந்து அவர் போஸ்ட் மூலம் பதிலளித்துள்ளார்.

தான் எந்த மதத்துக்கும் எதிரானவள் அல்ல எனவும் தி கேரளா ஸ்டோரியும் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை என போஸ்ட் போட்டிருக்கிறார். இந்த படம் வெறுப்பை உமிழும் படம் இல்லை எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் எனவும் கூறியுள்ளதால் ரசிகர்கள் பலர் இவர் மீது மேலும் கடுப்பாகியுள்ளனர். 

Tags:    

Similar News