வைரலாகும் ஷிவானியின் கவர்ச்சிப் புகைப்படங்கள்..!
நடிகை ஷிவானி நாராயணன் தற்போது, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சிப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.;
நடிகை ஷிவானி நாராயணன்.
பிக்பாஸ் சீஸன்-4ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை ஷிவானி நாராயணனும் ஒருவர். 'பகல் நிலவு' சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் தடம் பதித்த ஷிவானி தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம்', 'இரட்டை ரோஜா' உள்ளிட்ட சீரியல்களில் நாயகியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
இந்தநிலையில், பிக்பாஸ் சீஸன்-4ல் கலந்துகொண்டு இன்னும் கொஞ்சம் கூடுதல் புகழையும் ரசிகர் வட்டத்தையும் பெருக்கிக் கொண்டார். நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலருக்கு வாய்ப்பமையும் தருணத்தில் எல்லாம் தகுந்த வாய்ப்பை வழங்கி அவர்களது வளர்ச்சிக்கு மேலும் வழி அமைத்துக் கொடுக்கத் தவறுவதில்லை.
அவ்வகையில், கமலின் 'விக்ரம்' படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது. ஏற்கெனவே பெரிய திரையில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் 'விக்ரம்' வெளிவந்த பின்பு ஷிவானிக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையத் தொடங்கியுள்ளன.
ஆனாலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் போஸ்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி, அண்மையில் கடற்கரை மணலில் கவர்ச்சித் தேவதையாக பல கோணங்களில் பார்ப்பவர் கண்கள் படாதபாடும் அளவுக்கு உச்சபட்ச கவர்ச்சியோடு போஸ் கொடுத்த புகைப்படங்களைப் போஸ்ட் செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் அத்தனையும் வைரலாகி வலம் வருகின்றன.