பொன்னியின்செல்வனில் ஷாலினி அஜித் குமார்..?!

Ponniyin Selvan Actors -பொன்னியின் செல்வன் படம் மூலம் நடிகை ஷாலினி அஜித் குமார் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்பது மெய்யா... பொய்யா..?;

Update: 2022-06-14 02:12 GMT

Ponniyin Selvan Actors - கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை திரைப்படமாக்க வேண்டும் என்பது தமிழ்த்திரையுலக ஜாம்பவான்கள் பலரின் பெருங்கனவு என்பது எம்ஜிஆர் காலத்திலிருந்தே பரவிவரும் தகவல். எம்ஜிஆர் இதற்கான முன்னெடுப்பில் இறங்கி, பின் அதனை கைவிட்டார். நடிகர் கமல்ஹாசனும் அதற்கான முயற்சியில் இறங்கி பின் அப்படியே நிறுத்திவைத்துவிட்டார்.

இதுபோன்று பொன்னியின் செல்வனைப் படமாக்க பலர் முன்னெடுத்து, தொடராத நிலையில், இயக்குநர் மணிரத்னம் தன் கனவுப் படம் இது என்று அதற்கான முயற்சிகளில் இறங்கி வெற்றிகரமாக படத்தின் முதல் பாகம் நிறைநிலையை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

படம் வரும் செப்டம்பரில் திரையரங்குகளை நிரப்பப் போகிறது என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராய், விக்ரம், கார்த்தி, 'ஜெயம்' ரவி உள்ளிட்ட இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட நடிகை அதன்பிறகு, நடிப்பிலிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டார். தற்போது, 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்றும் அதுவும் பொன்னியின் செல்வனில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் எனவும் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் எனவும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து அஜித் தரப்பினரோ, "பொன்னியின் செல்வனில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று வெளியாகும் செய்திகள் உண்மையில்லை அது முற்றிலும் வதந்தி. அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை அத்தனை வதந்திகளும் வடித்தெடுத்த பொய்" என்று தெரிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News