அட்லீ டைரக்ட் செய்யும் இந்தி பட ஷூட்டிங் மீண்டும் தொடங்குதாமுங்கோ
அட்லீ டைரக்ட் செய்ய ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்தி பட ஷூட்டிங் அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறது என தகவல்;
அட்லீ டைரக்ட் செய்யும் ஷாருக்கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்திப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் மீண்டும் தொடங்குதாமுங்கோ!
ஷாருக்கான் நடிக்கும் படத்தை டைரக்ட் செஞ்சு வந்தார், அட்லீ. அதுலே நயன்தாரா நாயகியாகவும் கூடவே சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிச்சிருக்கிட்டிருந்தாய்ங்க. இதில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்பட்டுச்சு. இதன் ஷூட்டிங் சில மாசங்களுக்கு முன் புனேவின் தொடங்கிச்சு. அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், ஷூட்டிங் தடைப்பட்டுச்சு. பின்னர் ஷாருக்கான், 'பதான்' என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகிட்டார் . உடனே சில பல பேர், அட்லீ இயக்கும் இந்தி படம் நின்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் கமெண்ட் அடிச்சாய்ங்க.
இந்நிலையில் இப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் மும்பையில் மீண்டும் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்துகொள்கிறார் அப்படீன்னு சேதி வந்துருக்குது.