திருமணம் ஆன ஒரே மாதத்தில் நடிகை விவாகரத்து?

Serial Actress Samyuktha Divorces Vishnu Kanth-சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சீரியல் நடிகை சம்யுக்தா இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டார்களா என்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவுகிறது.;

Update: 2023-05-09 11:45 GMT

பைல் படம்.

Serial Actress Samyuktha Divorces Vishnu Kanth

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலிக்கும் செய்தியை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களிடம் சில மாதங்களுக்கு பிறகு முன்பு தெரிவித்து இருந்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருப்பதாக கூறி இவர்களுடைய காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். விஷ்ணுகாந்த் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் தற்போது முடிவடைந்த ரஜினி சீரியலிலும் இதற்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அது போல சம்யுக்தாவும் நிறைமாத நிலவே என்னும் சீரியல் மூலமாக பிரபலமானவர்தான். இவர்கள் இருவரும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் தங்களுடைய காதலை மறைத்து வைத்திருந்தனர்.

சிப்பிக்குள் முத்து சீரியல் முடிவடையும் நேரத்தில் தங்களுடைய காதலை இருவரும் ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தனர். நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்த்தை டேக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் உன்னை நான் கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றுபவர். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்வில் வந்ததற்கு மிக்க நன்றி என்று கூறியிருந்தார். அதற்குப் பிறகு கடந்த மாதம் தான் இவர்களுடைய திருமணம் வெகு விமர்சனமாக நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருடைய கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்த திருமண போட்டோக்களை டெலிட் செய்திருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து இருவருடைய பதிவுகளிலும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் விஷ்ணுகாந்த் விரைவில் எல்லாம் தெரியவரும் என்று பதில் கொடுத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து சம்யுக்தா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இன்று ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் நினைத்தது நடந்தது, அது நல்லது தான். குறிப்பு, இனிமேல் என் வாழ்க்கை தொடங்க போகிறது. மேலும் நீங்கள் யாரும் நினைத்து பார்க்காதது இனிமேல் என் வாழ்வில் நடக்கப்போகிறது. அதனால் பெரும் ஏமாற்றத்தை தாங்கும் சக்திக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதனால் இவருடைய கணவரும் இவரும் பிரிய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இவர் இந்த பதிலடி கொடுத்திருக்கிறாரா? அல்லது எதற்காக இப்படி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார் என்று குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி விட்டதா? இனி மீண்டும் இருவர்கள் சேரப் போகிறார்களா? அது குறித்து தான் இப்படி ஒரு பதிவா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News