'சர்தார்' பட டீசர்… ஆறு வேடங்களில் அதகளப்படுத்தும் நடிகர் கார்த்தி..!
நடிகர் கார்த்தி, நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 'சர்தார்' டீசர் வெளியாகியுள்ளது.;
தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு மீண்டும் தனது பன்முகத் திறமையைக் காட்டி பரிணமிக்கத் தயாராகி வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் வந்தியத்தேவனாக நடித்த, இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தநிலையில், இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம், மிரட்டலான ஆக்ஷன் படமாகும்.
இப்படம் தீபாவளியன்று பிரமாண்டமாக வெள்ளித்திரையில் வெளியாகும் எனத் தகவல் கசிந்துள்ளது. இதற்கிடையில், படத்தின் முதல் சிங்கிள் மற்றும் டீசர் குறித்த அப்டேட் ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களைத் திணறடித்துள்ளது. அண்மையில், நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் புதிய போஸ்டர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகையான லைலா இப்படத்தின் மூலம் திரையில் மீண்டும் என்ட்ரி ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்த கூடுதல் தகவல். இந்தநிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, அதில் நடிகர் கார்த்தி ஆறு வேடங்களில் அதகளப்படுத்தும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.