முடிவுக்கு வந்த சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் தொடர்!

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், கலர்ஸ் மற்றும் ஸ்வஸ்திக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்தது.;

Update: 2024-08-16 16:08 GMT

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடரான 'சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்' நிறைவடைந்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், கலர்ஸ் மற்றும் ஸ்வஸ்திக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்தது.

சிறப்பான நடிப்பும் பிரமாண்டமான செட்டும்

பிரபல தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் சித்தார்த் குமார் திவாரி இயக்கத்தில், சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் தொடரில் சூர்யதேவர் வேடத்தில் சலில் அங்கோலாவும், விஷ்ணுவாக திவாகர் புந்திரும், சிவனாக தருண் கன்னாவும், இளம் சனீஸ்வரனாக கார்த்திகேயா மாளவியாவும், அவரது தாயாக ஜூஹி பார்மரும் நடித்துள்ளனர்.

இந்த தொடருக்கான செட் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு செட், சனீஸ்வரன் வளரும் காடு போன்று வடிவமைத்து அமைக்கப்பட்டது. இந்த செட் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு ஷூட்டிங் செய்யப்பட்டது.

கதைக்களம்

சனீஸ்வரன் பிறந்தவுடன் அவரது தந்தை சூர்யதேவரின் கைகளில் அநீதியை எதிர்கொள்கிறார். சனீஸ்வரனின் வாழ்க்கையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் தொடராக இது இருக்கும். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான நிலையற்ற உறவு, ஆதிக்கத்துக்கான இறுதி போரான தேவ அசுர சங்க்ரமுவுக்கு வழிவகுத்த ஒரு சகாப்தத்துக்கு இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை அழைத்து செல்லும்.

போர் கடுமையாக மாறும்போது, சிவபெருமான் தலையிட்டு, நன்மைக்கும் தீமைக்கும் இடையே சமநிலையை பராமரிக்கும் ஒரு புதிய ஆற்றலுக்கு திரித்துவம் (ஒன்றில் மூன்று ஐக்கியம்) வழி செய்கிறது என்று அறிவிக்கிறார். இதனால் சனீஸ்வரன் பிறக்கிறார்.

சனீஸ்வரனின் பிறப்பும் வளர்ப்பும்

சூர்யதேவருக்கும் அவரது மனைவி சாயாதேவிக்கும் (சூர்யதேவரின் மனைவி சந்தியாவின் நிழல் மூலம் உருவானர் சாயாதேவி) பிறந்தவர் சனீஸ்வரன். அதாவது ஒளி கடவுளான சூர்ய தேவர் மற்றும் சாயா, அவரது மனைவி சந்தியாவின் நிழலுக்குப் பிறந்த குழந்தைதான் சனீஸ்வரன்.

ஆனால் சனி பிறப்பிலேயே தூற்றப்படுகிறார். ஒரு காட்டில் சாயாவால் வளர்க்கப்பட்டு, சூர்யலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சனி, கர்மாவின் பாதையில் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

நீதிக்கான குரல்

அவர் வயதாகும்போது, கடினமான சூழ்நிலைகளில் கூட தயங்காமல் தொடர்ந்து சரியான நீதியை வழங்குகிறார். அவர் உயர்ந்த உண்மைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார். பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களை துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழ தொடங்கினார்.

ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங்

கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. இப்போது ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீமிங்கும் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News