ஹிந்தி நடிகர் சொல்லியும் கேட்காத நடிகை! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

ஹிந்தியில் வருண் தவானுடன் சேர்ந்து ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார் என தகவல். மேலும் ஃபேமிலி மேன் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் கூட்டணியில் இன்னுமொரு வெப் தொடரில் நடிக்கிறார்.;

Update: 2023-02-20 15:36 GMT

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடந்த சில ஆண்டுகளாக கடுமையான சிகிச்சைகளுக்கு உட்பட்டு வருகிறார். இதனோடு அவர் ஒப்பந்தமாகியிருந்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள், வெப் சீரிஸ், விளம்பரப் படங்கள் என அனைத்திலிருந்து வெளியேறி தனது உடல் நலத்தை பேணி பாத்துக் கொண்டிருந்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படத்திலும் விளம்பர படங்களிலும் நடிக்க வில்லை. ஓய்வு மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் சமந்தா சிகிச்சையில் பலன் பெற்று முன்னேறி உடல் நலம் தேறி சில படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

ஹிந்தியில் வருண் தவானுடன் சேர்ந்து ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார் என தகவல். மேலும் ஃபேமிலி மேன் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் கூட்டணியில் இன்னுமொரு வெப் தொடரில் நடிக்கிறார். இதற்காக அவர் மெனக்கெடும் வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த விசயம் ஃபேமிலி மேன் டிராமாவில் அவருடன் சேர்ந்து நடித்த மனோஜ் பாஜ்பேய்க்கும் தெரிந்துள்ளது. இதனை அறிந்த அவர் சமந்தாவுக்கு இணையம் மூலமாக அறிவுரை வழங்கியுள்ளார்.

சமந்தா கடின உழைப்பாளி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இப்படி ஒரு பிரச்னை இருக்கும்போது அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது. அது அதிக வலி தரக்கூடியது. எளிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் படத்துக்காக தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சமந்தா. 

Tags:    

Similar News