அன்று ஜோடி ; இன்று வில்லி – அதுவும் இந்த நடிகருக்கு : அசத்தும் 'சமத்து' சமந்தா!
Samantha acts antagonist role in Thalapathy 67 movie - விஜய் உடன் 'செல்பி புள்ள' ஆக நடனமாடிய சமந்தா, விஜய்க்கே வில்லியாக நடிப்பதை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்லாமல், நாங்க எல்லோருமே 'Waiting'!;
Samantha acts antagonist role in Thalapathy 67 movie - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள 'தளபதி 67' படத்தில் வில்லி கேரக்டரில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவான 'மாஸ்டர்' படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த கூட்டணி, மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
Samantha acts antagonist role in Thalapathy 67 movie - ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்க விரும்பாத இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விரைவில் தங்கள் கூட்டணி இணைய இருப்பதாக, சமூகவலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புதிய படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று விஜய் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு உள்ளனர்.
நடிகர் விஜய், தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை, செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு துரிதமாக செயல்பட்டு வருகிறது. போஸ்ட் புரொடக்சன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.
Samantha acts antagonist role in Thalapathy 67 movie - இதனிடையே, லோகேஷ் கனகராஜ் – விஜய் இணைய உள்ள 'தளபதி 67' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படம் பெரும்வெற்றி அடைந்ததை தொடர்ந்து, விஜய் உடன் இணையும் படம், அதைவிட பெரிய வெற்றி பெறும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் உடன் கத்தி, தெறி, மெர்சல் படங்களில் ஜோடியாக நடித்த நடிகை சமந்தா, 'தளபதி 67' படத்தில், வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Samantha acts antagonist role in Thalapathy 67 movie - 'தி பேமிலி மேன்' என்ற வெப் சீரிஸில், சமந்தாவின் நெகட்டிவ் கேரக்டர் பெருமளவில் பேசப்பட்ட நிலையில், விஜய்யின் புதிய படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஜய் உடன் 'செல்பி புள்ள' ஆக நடனமாடிய சமந்தா, விஜய்க்கே வில்லியாக நடிப்பதை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்லாமல், நாங்க எல்லோருமே 'Waiting'!