அழகான பெண்கள் குறித்து மல்லிகா ஷெராவத்திடம் கேள்வி கேட்ட சல்மான் கான்
அழகான பெண்கள் குறித்து மல்லிகா ஷெராவத்திடம் சல்மான் கான் கேட்ட கேள்விகள் இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.;
சல்மான் கான் மல்லிகா ஷெராவத்திடம் அழகான பெண்கள் குறித்து ஒரு கேள்வி கேட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுடன் பட உலகின் கவர்ச்சி கட்டழகன் நடிகர் சல்மான்கான். தஸ் கா தம் 2 நிகழ்ச்சியில் சல்மான் கானின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோவில், அழகான பெண்கள் எப்பொழுதும் சாதாரண தோற்றத்தில் இருக்கும் ஆண்களை திருமணம் செய்து கொள்வது அல்லது அவர்கள் தங்கள் காதலர்களாக இருப்பது ஏன் என்று மல்லிகா ஷெராவத்திடம் சல்மான் கான் கேட்கிறார்.
பாலிவுட்டின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் சல்மான் கான். நடிகர் திருமணமாகவில்லை என்றாலும், காதலி அல்லது திருமணம் போன்ற பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அழகான பெண்கள் குறித்து சல்மான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவருக்கும் மல்லிகா ஷெராவத்துக்கும் இடையேயான உரையாடல் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. 'தஸ் கா தம் 2' கேம் ஷோவில் இருந்து வைரலான வீடியோ. ரெடிட்டில் ஒரு வைரல் வீடியோவில், அழகான பெண்கள் பெரும்பாலும் சாதாரண அல்லது சராசரி தோற்றத்தில் இருக்கும் ஆண்களை திருமணம் செய்வது ஏன் என்று சல்மான் கான் கேட்கிறார்.
இதற்கு பதிலளித்த மல்லிகா ஷெராவத் பெண்கள் தோற்றத்திற்கு முதலிடம் கொடுப்பதில்லை, மாறாக எதிரில் இருப்பவரின் குணம் மற்றும் புத்திசாலித்தனத்தைப் பார்க்கிறார்கள் என்றார்.
மீண்டும் சல்மான் கேட்கிறார், "மிகவும் அழகான பெண்கள் தோற்றம் குறைந்த ஆண்களை திருமணம் செய்வதையோ அல்லது அவர்கள் தங்கள் காதலர்களாக இருப்பதையோ நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன். இது ஏன்? தயவுசெய்து எனக்கு விளக்கவும்?"
இது குறித்து மல்லிகா கூறுகையில், "ஏனென்றால் தோற்றம் அவ்வளவு முக்கியமில்லை. மனம் தான் முக்கியம். தோற்றம் வரும், போகும் ஆனால் ஒரு மனிதன் புத்திசாலியாக இருப்பது முக்கியம்." மல்லிகாவின் பதிலுக்கு உடனே சல்மான், 'அவளிடம் தோற்றம், பணம், எதுவுமே இல்லாத பெண்களின் சிந்தனை ஆச்சரியமாக இருக்கிறது.. நீ ஒரு தெய்வம்.
ரெடிட்டில் வீடியோ வைரலானவுடன், ரசிகர்கள் மல்லிகாவைப் பாராட்டத் தொடங்கினர். ஒரு பயனர் எழுதினார், "அவள் மிகவும் அழகாக இருக்கிறாள்." மற்றொருவர், "பாலிவுட் மற்றும் பார்வையாளர்கள் மல்லிகாவை மிகவும் மோசமாக நடத்தினர், அவர் ஒரு பெண்ணியவாதி என்பதால் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்" என்று கருத்து தெரிவித்துள்ளார். சல்மான் மற்றும் மல்லிகாவை ஒரு காதல் நகைச்சுவை படத்தில் நடிக்க வைக்க ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.