கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா

Actress Roja Daughter- தெலங்கானா அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.;

Update: 2022-08-23 06:38 GMT

நடிகை ரோஜாவுடன் அவரது மகள் அன்ஷுமாலிகா.

Actress Roja Daughter - நடிகை ரோஜா தமிழில் செம்பருத்தி, சூரியன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக இருந்தவர். இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இவர் சினிமா இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, இதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் என பயிற்சி பெற்று வருகிறாராம்.

ஏற்கனவே இவர் எழுதிய 'தி ஃபிளேம் இன் மை ஹார்ட்' எனும் புத்தம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்திய அளவில் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் அன்ஷுமாலிகா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனது மகள் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்பதை ரோஜா மற்றும் அவரது கணவரும் இயக்குனருமான செல்வமணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News