காதல் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான நடிகர் தண்டபாணி நினைவு தினம்
தண்டபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்தவர்.பொரி-கடலை வியாபாரம் செய்து வந்தார். 2004 ஆம் ஆண்டில் வெளியான காதல் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.
காதல் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான நடிகர் காதல் தண்டபாணி நினைவு தினம்
திரைப்பட நடிகர் தண்டபாணி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 150 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர, நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். காதல் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான காதல் தண்டபாணி என பரவலாக அறியப்படுகிறார்.
தண்டபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்தவர். பொரி-கடலை வியாபாரம் செய்து வந்தார். 2004 ஆம் ஆண்டில் வெளியான காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதனால் இவர் "காதல்' தண்டபாணி எனவும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும் , வட்டாரம், முனி, வேலாயுதம்,வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார். இறுதியாக காந்தர்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சென்னையில் வசித்துவந்த தண்டபாணி சண்டமாருதம் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது 2014 ஜூலை 20 ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 71 ஆகும். மனைவி அருணா இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.