ரஜினியுடன் அருணாசலம் படத்தில் நடித்த நடிகர் ரவிச்சந்திரன் நினைவு நாள்
ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்த குணசித்திர நடிகர் ரவிச்சந்திரன் நினைவு நாள்;
ரஜினியுடன் அருணாசலம் படத்தில் நடித்த நடிகர் ரவிச்சந்திரன் நினைவு நாள் இன்று...
தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார்.
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டு பரபரப்பான நாயகர்கள் இருக்க, அவர்களுக்கு மாற்றாக அடுத்த தரவரிசை நாயகர்களையும் வைத்து அழகு பார்க்கும். எண்பதுகளில் ரஜினி கமல் என்றிருக்க, கார்த்திக், பிரபு , மோகன் என்று ஒரு அடுக்கு இருந்தது போல, அறுபதுகளில் இருந்து எழுபதுகளில் கமல், ரஜினி சகாப்தம் வரும் வரை எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், என்ற வட்டத்தில் ரவிச்சந்திரனையும் விலக்கமுடியாது. ஒரு கல்லூரி மாணவனுக்குரிய களையான தோற்றம், கூடவே அழகாக நடனமாடவும், நளினமாகப் பேசவும் தெரிந்த நடிகராக அறியப்பட்டவர்
ஹீரோக்கள் நடித்த காலம் போய், பின்னர் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் "ஊமை விழிகள்" படத்தின் மூலம் மீண்டும் புத்துணர்வு கிடைத்தது. அந்தபடத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார் ரவிச்சந்திரன்.
இப்பேர்பட்ட ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை நோய் இருந்து வந்தது.. அதனால் கிட்னி இரண்டு பாதித்து கோமா ஸ்டேஜில் சில நாட்கள் இருந்து இதே நாளில் மறைந்தார்