சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தனி விமானத்தில் ரவீந்தர்

ravindhar and mahalakshmi travel in private jet - சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தயாரிப்பாளர் ரவீந்தர் தனி விமானத்தில் பயணம் செய்தார்.

Update: 2022-09-12 12:36 GMT

ravindhar and mahalakshmi travel in private jet - இயக்குனர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமணத்திற்குப்பின் இருவரும் தனி விமானத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

அதேபோல், சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர், தனி விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர், ''நானும் எனது மனைவியும் தனி விமானத்தில் குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறோம். இதை வைத்து நீங்கள் ஹனிமூன் செல்வதாக இந்த புகைப்படத்தை வச்சு செஞ்சு விடாதீர்கள்'' எனப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடப்பட்டது.

ஏற்கெனவே ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் குறித்து இணையத்தில் பல்வேறு சர்ச்சைகளும், கருத்துக்களும் பரவினாலும், இவர்கள் இருவரும் தற்போது சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News