'மாற்ற முடியாதது' - வைரலாகும் நடிகை ராஷ்மிகா -வின் டாட்டூ
Rashmika Mandanna Hand Tattoo Name Meaning-ராஷ்மிகா கையில் 'மாற்ற முடியாதது' என்ற அர்த்தம் தரும் வகையில், ஆங்கில வார்த்தை டாட்டூ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
நடிகை ராஷ்மிகா மந்தனா.
Rashmika Mandanna Hand Tattoo Name Meaning- நடிகை ராஷ்மிகா மந்தனா, 'நேஷனல் க்ரஷ்' என்று இளைஞர்களால் அழைக்கப்படுகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ராஷ்மிகா நடித்து வருகிறார். தற்போது, நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தில் ராஷ்மிகா, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
பல பேட்டிகளில் ராஷ்மிகா, விஜயுடன் நடிக்க மிகவும் ஆசை என்று கூறியிருந்தார். அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது. 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட்டில், விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
தெலுங்கில், சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட்டான 'சீதா ராமம்' படத்திலும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'குட் பை' படத்திலும் ராஷ்மிகா நடித்திருந்தார்.
ராஷ்மிகா தனது கையில் 'Irreplaceable' என்ற வார்த்தையை டாட்டூவாக போட்டுள்ளார். இதன் அர்த்தம் 'மாற்ற முடியாதது' என்பதாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2