ராம் சரண் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

ஒரு ஆண்டுக்கு சில மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார் ராம்சரண். இவரது சொத்து மதிப்பு இதுவரை மதிப்படப்பட்டதின் அடிப்படையில் 175 மில்லியன் டாலர்களாகும். இது இந்திய மதிப்பில் 1370 கோடி ரூபாய் ஆகும். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பதால் இவரது சொத்து மதிப்பு மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.;

Update: 2023-04-01 11:45 GMT

ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமாகிவிட்டார் ராம் சரண். இவர் தனது 37வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். உலகின் மிகப் பெரிய விருதுகளாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ், ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியா திரும்பியிருக்கும் ராம் சரணுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாளாகவே இருக்கும். தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ராம்சரணின் சொத்து மதிப்பு உள்ளிட்ட பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்

ஒரு ஆண்டுக்கு சில மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார் ராம்சரண். இவரது சொத்து மதிப்பு இதுவரை மதிப்படப்பட்டதின் அடிப்படையில் 175 மில்லியன் டாலர்களாகும். இது இந்திய மதிப்பில் 1370 கோடி ரூபாய் ஆகும். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பதால் இவரது சொத்து மதிப்பு மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.

ஒரு பட சம்பளம்

இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் சம்பளம் என்பது மாறுபடும் விசயம் என்பதாலும் பெரும்பாலும் வருடக்கணக்கில் சில படங்கள் நடிப்பதால் அதை துல்லியமாக கணக்கிடுவதும் இயலாத காரியம். ஆனால் ராம்சரண் கடந்த 5 ஆண்டுகளில் தோராயமாக 30 கோடி ரூபாய் வரை ஒரு படத்துக்காக வாங்கியிருக்கிறார். இது ஒரு சராசரி கணக்கீடு ஆகும். அதே நேரம் இவர் சம்பாதிப்பது தயாரிப்பாளராகவும் இருப்பதால் அதிகமாகவே இருக்கிறது. அதேநேரம் அதற்கான சரியான கணக்கீடுகள் தெரியவில்லை.

விளம்பரங்கள்

பல பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமாகியுள்ள ராம்சரண் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். சராசரியாக ஒரு விளம்பர படத்தில் நடிக்க 1.8 கோடி ரூபாய் வாங்குகிறார். ஆனாலும் இது ஒவ்வொரு விளம்பரத்துக்கும் வேறுபடும். அரசு விளம்பரத்துக்கு மிக குறைவான தொகையையும் பெரிய நிறுவனங்களிடம் விளம்பரத்துக்கு ஏற்ப தொகையையும் சம்பளமாக பெறுகிறார் ராம் சரண்.

பெப்ஸி, டாடா டோகோமோ, வொலேனத, அப்பல்லோ ஜியா, ஹீரோ மோட்டோக்ராப், ஃப்ரூட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ராம் சரண்.

சொகுசு பங்களாக்கள்

ஹைதராபாத் மற்றும் மும்பையில் தனக்கென சொந்தமாக சொகுசு வீடுகளை வாங்கி வைத்துள்ளார் ராம்சரண்.

ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இவருக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. அதில் அவரது அம்மாவுடன் அப்பா சிரஞ்சீவியும் வசித்து வருகிறார்கள். இவர்களின் மருமகளும் ராம்சரண் மனைவியுமான உபஸ்னாவும் இங்குதான் வசித்து வருகிறார்.

மும்பையிலும் வீடு வாங்கியிருக்கிறார் ராம்சரண். மும்பை செல்லவேண்டிய நேரங்களில் அங்கு தங்கிக்கொள்வார்.

கார்கள்

ராம்சரணிடம் ஏகப்பட்ட ஆட்டோமொபைல்கள் இருக்கின்றன. அவருக்கு கார் கலெக்ஷன்கள் மிகவும் பிடிக்குமாம். Mercedes Maybach GLS 600, Audi Martin V8 Vantage, Rolls Royce Phantom, Range Rover Autobiography, Aston Martin மற்றும் Ferrari Portofino உள்ளிட்ட கார்களை தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறார் ராம்சரண்.

தொழில்கள்

தயாரிப்பாளராக இருக்கும் ராம்சரண் தன் தந்தையை வைத்து கைதி நம்பர் 150 என சிரஞ்சீவியின் 150வது படத்தை தயாரித்திருந்தார். சைரா நரசிம்மரெட்டி படத்தையும் இவரது நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது.

தனியார் விமானம்

தனியார் விமான நிறுவனமும் இவரது பெயரில் இயங்கி வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 5 - 8 விமானங்கள் பறக்கின்றன. தேவைப்பட்டால் ராம்சரணின் குடும்பம் இதே விமானத்திலேயே உலக சுற்றுலாவும் செல்கிறார்கள்.

நெட் ஒர்த் எனப்படும் சொத்து மதிப்பு 1300 கோடியுடன் பல நல்ல விசயங்களையும் செய்து வருகிறார் ராம்சரண். 

Tags:    

Similar News