நாட்டு நாட்டு ஹூக் ஸ்டெப்பில் கலக்கும் சல்மான்கான், ராம் சரண்: டிரெண்டிங் பாடல்

yentamma movie update in tamil-சல்மான் கானின் யென்டம்மா பாடலில் நாட்டு நாட்டு பாடலின் ஹூக் ஸ்டெப் மீண்டும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update: 2023-04-04 13:45 GMT

சல்மான்கான், வெங்கடேஷ், ராம்சரண் மூவரும் இணைந்து நடனமாடும் காட்சி.

yentamma movie update in tamil-சல்மான் கானின் யென்டம்மா பாடலில் நாட்டு நாட்டு பாடலின் ஹூக் ஸ்டெப் மீண்டும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தி திரையுலகின் நட்சத்திர நடிகரான சல்மான் கான் தற்போது நடிகர் வெங்கடேஷ் டக்குபதியுடன் இணைந்து கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.


தற்போது அந்த படத்தில் இடம்பெற்றுள்ள யென்டம்மா எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் கூடுதல் சிறப்பாக நடிகர் ராம் சரண் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். சல்மான்கான், வெங்கடேஷ், ராம் சரண் ஆகிய மூவரும் வேஷ்டி மற்றும் மஞ்சள் நிற சட்டையுடன் நாட்டு நாட்டு பாடலின் ஹூக் ஸ்டெப்பை ஆடும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலிருந்து ஷாருக்கான், தீபிகா படுகோனின் லுங்கி டான்ஸ் பாடலை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது.

சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே என பலர் நடிக்கும் இப்படத்தை ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். இந்த படத்தி சல்மான் கான் தயாரிக்கிறார். இது 2014ம் ஆண்டில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வீரம் படத்தின் ரீமேக்காகும்.

Tags:    

Similar News