கமல்ஹாசன் வீட்டில் பல மணி நேரம் காத்திருந்த ரஜினி!

இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஸ்டாரான கமல்ஹாசன் வீட்டு வாசலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காத்திருந்திருக்கிறார். இதனை கமல்ஹாசனின் அண்ணன் மகள் சுகாசினியே தெரிவித்துள்ளார்.;

Update: 2023-05-12 11:35 GMT

இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஸ்டாரான கமல்ஹாசன் வீட்டு வாசலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காத்திருந்திருக்கிறார். இதனை கமல்ஹாசனின் அண்ணன் மகள் சுகாசினியே தெரிவித்துள்ளார்.

பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ரஜினிகாந்த். சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு சினிமா கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். பின்னர் பாலச்சந்தர் மூலம் அபூர்வ ராகங்கள் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் நடிக்கும்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் வீட்டு வாசலில் பல மணி நேரம் காத்திருந்த சம்பவங்களும் நடந்துள்ளனவாம். இதுகுறித்து மணிரத்னத்தின் மனைவியும் கமல்ஹாசனின் அண்ணன் மகளுமான சுகாசினி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றினார். அதன்பிறகு ரஜினி தனி பாதையில் சென்றால் மட்டுமே அவரும் முன்னணி நடிகராக முடியும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் தனி டிராக்கில் பயணிக்க தொடங்கினார். அவரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறத் தொடங்கியதும் கதையில் கவனம் செலுத்தாமல் வெறும் படம், பணம் என பாதை மாறிச் சென்றார் சூப்பர் ஸ்டார். ஆனாலும் அவ்வப்போது நல்ல நல்ல படங்களையும் கொடுத்து வந்தார். மசாலா மன்னனாக வலம் வந்த ரஜினிகாந்த் பா ரஞ்சித்துடன் இரண்டு படங்களில் நடித்தார். அதன்பிறகு பெரிய அளவில் எந்த படத்திலும் நடிக்காமலே இருந்தார். பேட்ட, தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் அரசியல் பேசி கேலிக்கும் ஆளாகினார்.

இந்நிலையில் தனது ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த் எப்படி இருந்தார் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை சுகாசினி, ரஜினிகாந்த் கமல்ஹாசன் வீட்டில் அவருக்காக காத்திருப்பார் எனவும் அவர் செல்லும் காரில்தான் பயணிப்பார் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சுகாசினியும் அவரது அக்காவும் சென்றுகொண்டிருக்கும்போது காரில் வந்த ரஜினிகாந்த் அவரின் அக்காவைப் பார்த்து பேச முயற்சி செய்ததாகவும், லிப்ட் வேண்டுமா என்று கேட்டதாகவும், தாங்கள் கமல்ஹாசனின் அண்ணன் பொண்ணுங்க என்று கூறியதும் அவர் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகும் கூறுகிறார்.

இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஷிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோப் என பலரும் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. முத்துவேல் பாண்டியன் ஆக்ஷனுக்கு தயாராகிவிட்டார். 

Tags:    

Similar News