Breaking உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்! தலைவர் 171 எப்ப தொடங்கும்?
ரஜினிகாந்த் படத்தை இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படம் எப்போது துவங்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் ரிலீசான பிறகு ரஜினிகாந்த் அடுத்தாக த செ ஞானவேல் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் இந்த ஆண்டுக்குள் ஷூட்டிங் முடிந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படத்துக்கு இருக்கும் ஹைப்பை விட லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணையும் அவரின் அடுத்த படம் மீதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
லோகேஷும் ரஜினியும் இணையும் படம் குறித்து லோகேஷ் வெளிப்படையாக பேச மறுத்துவிட்டார். அவர் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிப்பு வரும்போது உங்களுக்கு தெரியவரும் என்று கூறிவிட்டார். லியோ படத்தைப் பற்றியும் அது நன்றாக வந்திருப்பது குறித்தும் கேள்வி கேட்ட நிலையில், அதுகுறித்து பெரிய அளவில் அவர் ரியாக்சன் காண்பிக்கவில்லை.
இன்னும் சரியாக 3 மாதங்களே இருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ரஜினியுடன்தான் என உறுதியாகியுள்ளது. அவர் பேச மறுத்தாலும் அவரது முக பாவனைகளே காட்டிக் கொடுத்துவிட்டது. அந்த படத்தின் படப்பிடிப்பை 2024ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் துவங்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் முதல் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறாராம். இதனை கோலிவுட் வட்டாரத்திலிருந்து கிடைத்த செய்தியின் மூலம் அறியமுடிகிறது என்றாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.
இந்த படத்தை தயாரிக்க இருப்பது ராஜ்கமல் நிறுவனமா அல்லது சன்பிக்சர்ஸ் நிறுவனமா என்பதே மிகப் பெரிய சர்ப்ரைஸாக இருக்கிறது.