லியோ தயாரிப்பாளரிடம் பேசிய ரஜினி! என்ன சொன்னார்?
லியோ தயாரிப்பாளரிடம் பேசிய ரஜினி! என்ன சொன்னார் தெரியுமா?;
லியோ படம் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ஃபோன் செய்து பேசியதாக லலித்தே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் லியோ படத்தின் முதல் நாளிலேயே 148.5 கோடி வசூலைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதாவது உலகம் முழுவதும் முதல் நாளிலேயே 148.5 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வேறெந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனையாக கொண்டாடப்படுகிறது. இதனை படத் தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்கள். ஒரு சிலர் சில குறைகளைச் சொன்னாலும், படத்துக்கு, பலத்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.முதல் நாள் 5 காட்சிகள், இன்றைய தினம் இப்போது வரை 2 காட்சிகள் முடிந்துள்ள நிலையில் படம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் ஒட்டுமொத்தமாக 148.5 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் உலக அளவில் இந்தியா தவிர்த்த நாடுகளில் மட்டும் 70 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். இந்தியாவில் மட்டும் 78.5 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
படத்தைப் பற்றி கேள்விபட்ட ரஜினி, லலித்துக்கு கால் செய்து பேசியிருக்கிறார். புரொடக்ஷன் வேல்யூ அதிகம் இருக்கிறது என தன்னிடம் ரஜினி கூறியதாக தெரிவித்துள்ளார் லியோ தயாரிப்பாளர் லலித்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ்.
படம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதோடு விட்டுவிடாமல் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. படத்தில் விஜய்யின் நடிப்பு, திரிஷாவின் அழகு, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி ஆகியோரின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் தருணங்கள் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். படம் எல்சியூவில் இருக்கிறதா இல்லையா என்பதை ரசிகர்கள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார்கள். படத்தில் கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருக்கு மிகவும் வலிமையான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.