மகள் ஐஸ்வர்யாவுக்கு துணை நிற்கும் ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம்.

Update: 2022-09-23 16:38 GMT

பைல் படம்.

நடிகர் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யாவும், அவரது முன்னாள் கணவரான நடிகர் தனுஷும் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டு பிரிந்து வாழ்கின்றனர். பிரியப் போவதாக முடிவெடுத்த மறுகணமே ஐஸ்வர்யா தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தான் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து அறிவித்துள்ளார். அதன்படி, அவர் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறாராம். அதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு துணை நிற்கும் வகையில், அவர் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளாராம்.

Tags:    

Similar News