இப்ப இல்ல.. 1982லேர்ந்து ரஜினிக்கு இதே வேல! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

காலம் காலமாக ரஜினிகாந்த் தன்னுடன் போட்டி போடும் நடிகர்களைப் பற்றி மறைமுகமாக பாடல்களில் எழுத சொல்லி வருகிறார் என சர்ச்சை எழுந்துள்ளது.;

Update: 2023-07-18 11:55 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னைப் புகழ்ந்து பாடல் எழுத சொல்லி அதை சினிமாவில் வைத்து புகழ் தேடுபவர் என சிலர் சொல்லி வந்தாலும் மக்கள் அதனை நம்பவில்லை. இதெல்லாம் ரசிகர்கள் அவர்களாகவே செய்வது என்று பலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே கமல்ஹாசனுடன் போட்டி போட பஞ்ச் வச்சி பாட்டு போட்டு பாட்டு ஹிட்டானாலும் படம் ஊத்திக்கிச்சி என்கிறார்கள்.

இதை சொன்னது கமல்ஹாசன் ரசிகர்களோ இல்லை சாதாரணமாக டிவிட்டரில் பொழுதுபோக்குபவர்களோ இல்லை. தீவிர ரஜினி ரசிகராக இருக்கும் ஒருவர்தான். திமுகவின் மேடைப் பேச்சாளரான மதிமாறன் ரஜினிகாந்தின் மிகப் பெரிய ரசிகர். அவர் அரசியல் தவிர்த்த மற்ற அனைத்து நேரங்களிலும் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்.

இந்நிலையில் முன்னதாக ஒரு விவாதத்தில் ரஜினி குறித்து பேசும்போது 1982ம் ஆண்டில் தனிக்காட்டு ராஜா எனும் படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரு பாட்டை தனக்காக வைத்தார். அதில் நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு என்று வரிகள் இடம்பெறச் செய்தார் என்கிறார். அப்படி செய்தும் படம் ஓடவில்லை என்று தெரிவிக்கிறார்.

இந்த வீடியோவை தற்போது விஜய், அஜித், கமல்ஹாசன் ரசிகர்கள் வைரல் செய்து வருகிறார்கள். பாருங்கள் சூப்பர் ஸ்டார் அப்போதே அப்படித்தான் என்று கூறி அவருக்கான பாடல்களை லிஸ்ட் எடுத்து கலாய்த்து வருகிறார்கள்.

நேற்று வெளியான ஹுக்கும் பாடலில் விஜய்யை எதிர்த்து சில வரிகளை வேண்டுமென்றே வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ரஜினிகாந்துக்கு எதிராக மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பல விசயங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

Tags:    

Similar News