கழற்றிவிட்ட ரஜினி.. கைக்கொடுத்த கமல்.. ஹீரோ நம்ம STR

ரஜினி கழற்றிவிட்ட இயக்குநருக்கு கைக்கொடுத்து காப்பாற்றிய கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நம்ம STR நடிக்கிறாராம்.

Update: 2023-03-08 14:56 GMT

ரஜினிகாந்த் கழற்றிவிட்டதால் வேறு வழியில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த இயக்குநர் இப்போது கமல் கம்பெனிக்கு படம் பண்ண போறாராம். இதுதான் தற்போதைய கோலிவுட் டாக்.

ரஜினிகாந்த் அண்ணாத்த படம் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு கதை சொல்லி காத்திருந்தவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் ஹிட் ஆனதும் தனது அடுத்த படத்தை அதாவது அண்ணாத்த படத்துக்கு பிறகான படத்தை இயக்க தேசிங்கு பெரிய சாமியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க முன்வந்த நிலையில், படத்தின் பட்ஜெட் அதாவது தயாரிப்பு செலவு மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும் என்பதால் பின்வாங்கியது சன் பிக்சர்ஸ்.


சன்பிக்சர்ஸின் இந்த பேக் அடிப்புக்கு காரணம் அண்ணாத்த படம் சரியாக போகாததுதான். ரஜினிகாந்தை நம்பி இத்தனை கோடிகள் போட முடியாது அவருக்கு சம்பளம் மட்டுமே 100 கோடி, தயாரிப்பு செலவு 100 கோடி, விளம்பர செலவு, மற்ற செலவுகள் என 10, 15 கோடிகள் வந்து நிற்கும். மற்றவர்களிடம் கொடுத்து ரைட்ஸ் விற்றாலும் கூட நமக்கு நஷ்டம்தான் வரும் என கணக்கு போட, இந்த படத்தை தாங்கள் எடுக்கவேண்டாம் என முடிவெடுத்தது சன்.


ஆனால் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் ஒற்றை சொல்லுக்காக காத்திருந்தார். அவர் அடுத்த படத்தை இயக்கலாம் என்று நம்பி தனது 2 ஆண்டு காலத்தை வீணாக்கிக் கொண்டிருந்தார் என்று கூறுகிறார்கள். ரஜினிகாந்தை நம்பி பணம் போட சன் பிக்சர்ஸ், லைகா தவிர வேறு யாரும் தயாராக இல்லாத நிலையில் இரு தரப்பிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. அதில் சன்பிக்சர்ஸ் தரப்பு தாங்கள் நெல்சன் திலீப்குமாரை வைத்து படமெடுக்கலாம் எனவும், லைகா தரப்பு சிபி சக்ரவர்த்தியை வைத்து படமெடுக்கலாம் எனவும் சொல்ல, தேசிங்கு பெரிய சாமியை டீலில் விட்டுவிட்டார் ரஜினிகாந்த்.


இப்போது தேசிங்கு பெரிய சாமியின் நிலை யார் மூலமாகவோ சிம்புவுக்கு தெரியவந்துள்ளது. சிம்பு விஜய் டிவி மகேந்திரன் ஆகியோர் இந்த படத்தை எடுக்கலாம் என முயற்சித்திருக்கிறார்கள். மகேந்திரன் சொன்னால் கமல்ஹாசன் கேட்பார் என்பதும் சிம்புவும் கமல்ஹாசனும் இப்போது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பதும் சாதகமாக இருப்பதால் தேசிங்கு பெரிய சாமியின் கதையை படமாக எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.


ஒரு பக்கம் இப்படி பேசப்பட்டாலும், ரஜினிகாந்தே நினைத்திருந்தால் இந்த படத்தை தயாரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவர் கமல்ஹாசனிடம் இவருக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்க, அதில் நீங்களே நடித்து தரலாமே என்று ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்க, அவர் பதிலேதும் சொல்லாமல், வழக்கமாக சிரித்தபடி சென்றுவிட்டாராம். சரி சிம்புவை வைத்து படத்தை எடுக்கலாம் என ரஜினியிடம் கூறவே நல்ல சாய்ஸ் அவருக்கு கதை பொருத்தமாக இருக்கும். நமக்கு வயசாகிடிச்சி இனி இதுமாதிரி கதை நடிக்க வேண்டாம்னு நினைக்குறேன் கமல் என்றாராம் ரஜினிகாந்த்.

Full View

ஒரு வழியாக மகேந்திரன் - கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க தனது இரண்டாவது படத்தை இயக்க காத்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. 

Tags:    

Similar News