சிபி, தேசிங்கைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவையும் டீலில் விட்ட சூப்பர் ஸ்டார்!
இதில் ஹைலைட் என்னவென்றால் சிபி சக்ரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, வெங்கட் பிரபு மூவருமே ரஜினியின் தீவிரமான ரசிகர்கள்.;
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதுமுக இயக்குநர்கள் யாராவது நல்ல படங்களை இயக்கினால் அவர்களை முதல் ஆளாக பாராட்டத் தவறாதவர். அந்த அளவுக்கு தினம் தினம் அப்டேட்டாக இருப்பார். அந்த வகையில் வெங்கட் பிரபுவிடமும் ஒரு கதை கேட்டு அவரின் இயக்கத்தில் நடிக்க காத்திருந்தாராம் ரஜினிகாந்த்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார் என்கிற அப்டேட் கடந்த வாரம் வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் எப்படி நடிப்பார், என்ன மாதிரியான கதையாக இருக்கும், யார் நாயகியாக நடிப்பார் என்பன உட்பட பல விசயங்களை ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். லியோ படம் இன்னும் படப்பிடிப்பு முடிந்து வெளியாகாத நிலையில் ஏன் தளபதி 68 படத்தைப் பற்றி அப்டேட் வெளியிட்டது ஏன் என பலரும் கேட்டு வருகின்றனர். அதற்கு காரணம் இப்போதே லியோ படத்தைப் பற்றி யாரும் பேசிவிடக் கூடாது என்பதை சொல்கிறார்கள்.
இந்நிலையில் விஜய்க்கு முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க காத்திருந்தார் வெங்கட் பிரபு என ஒரு செய்து வெளியானது. அதற்கும் முன் ரஜினிகாந்துக்கு கதை சொல்லி காத்திருந்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஏற்கனவே டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஆகியோரை காக்க வைத்திருந்துவிட்டு பின் டீலில் விட்டார் ரஜினிகாந்த்.
தற்போது சிபி சக்ரவர்த்தி மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் என்கிறார்கள். தேசிங்கு பெரியசாமி சிம்பு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ரஜினிகாந்த் டீலில் விட்ட இயக்குநருக்கு கமல்ஹாசன் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
ரஜினிகாந்தும் தற்போது நெல்சன் திலீப்குமார் படத்திலும், லால் லசாம் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து த செ ஞானவேல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கும் முன்னதாக இரண்டு கதைகளுடன் வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்தாராம். ஆனால் இரண்டு கதைகளையும் வேண்டாம் என்று கூறி அனுப்பிவிட்டாராம். காரணம் அவை இரண்டுமே அரசியல் கதைகளாம். உஷாராக எஸ்கேப் ஆகிவிட்டார் ரஜினிகாந்த்.
இதில் ஹைலைட் என்னவென்றால் சிபி சக்ரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, வெங்கட் பிரபு மூவருமே ரஜினியின் தீவிரமான ரசிகர்கள்.