மீண்டும் காலில் விழுந்த ரஜினி.. இந்த முறை யாரிடம் தெரியுமா?
இந்த விழாவில் கலந்து கொண்டிருந்த ரஜினிகாந்த் அமிதாப் பச்சனைப் பார்த்ததும் படாரென காலில் விழுந்தார்.;
முகேஷ் அம்பானியின் இளைய மகள் ஆனந்த் திருமணவிழாவில் கலந்துகொண்ட ரஜினி நன்றாக ஆடி, மகிழ்ந்த நிலையில், மீண்டும் காலில் விழுந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்த முறை ரஜினி மரியாதை நிமித்தமாக யார் காலில் விழுந்தார் தெரியுமா? நம்ம பிக் பீ அமிதாப் பச்சன் காலில்தான்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க இருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதற்காக அம்பானி குடும்பத்தினர் பல லட்சம் கோடிகளை செலவு செய்துள்ளனர்
கடந்த ஆறு மாத காலங்களாகவே திருமண விழா குறித்த வீடியோக்கள்தான் இணைய உலகம் முழுக்க பரவி வருகிறது. திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரதமர் மோடியும் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மும்பையிலுள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் என திருவிழா போல களைக்கட்டியது.
இந்தியா முழுக்க பிரபலங்கள் நட்சத்திரங்கள் என எண்ணற்றோர் கலந்துகொண்டுள்ளனர். ஷாருக்கான், பிரியங்காசோப்ரா, நிக்ஜோன்ஸ் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது குடும்பம், சூர்யா, ஜோதிகா, அட்லீ, பிரியா, விக்னேஷ் சிவன், நயன்தாரா என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த விழாவில் கலந்து கொண்டிருந்த ரஜினிகாந்த் அமிதாப் பச்சனைப் பார்த்ததும் படாரென காலில் விழுந்தார். அவரிடம் ஆசி பெற்றுவிட்டு பின் பேசத் தொடங்கினார். ஆனால் இதனை முதலில் அமிதாப் பச்சன் தடுக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
பலரும் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வரும் அதே சூழலில் சிலர் இது என்ன சுயமரியாதை இல்லாத தன்மை என தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர். வயது முதிர்ந்த பின்னரும் தனது சீனியருக்கு வணக்கம் செலுத்தும் ரஜினிகாந்தின் குணத்தை பாருங்கள் என அவரது ஆதரவாளர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே ஷாருக்கானும் அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்றார்.