ஜெயிலர் படத்துக்காக மெனக்கெடும் ரஜினிகாந்த்! கடும் உடற்பயிற்சி!

ரஜினி ரசிகர்கள் பலர் பகிர்ந்து இத்தனை வயதிலும் உடற்பயிற்சி செய்கிறார் பாருங்கள் என்று பேசி வருகின்றனர். முன்னதாக விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஆர்ம்ஸ் தெரிய உடற்பயிற்சி செய்து வந்தார் என்பதும் அது மிகப் பெரிய அளவில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.;

Update: 2023-02-17 07:37 GMT

ஜெயிலர் படத்துக்காக ரஜினிகாந்த் இந்த வயதிலும் விடாமல் உடற்பயிற்சி செய்து வருவதாகவும் சில காட்சிகளுக்காக மிகவும் மெனக்கெடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்துக்கு பிறகு நெல்சனும் அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்தும் இணையும் புதிய படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே மீண்டும் இணைகிறார்கள் இருவரும். இந்த படத்துக்கும் இசை அனிருத்தான். நாயகியாக தமன்னாவும் ரம்யாகிருஷ்ணனும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பான்மையான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது ரஜினிகாந்த் - ஷிவராஜ்குமார் தொடர்பான காட்சிகல் நடைபெற்று வருகிறது. இந்த காட்சி ஒரு சண்டைக்காட்சி என்கிறார்கள்.

மங்களூருவில் ரசிகர்கள் சிலரும் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அப்படி வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்றில் ரஜினிகாந்த் அறையில் உடற்பயிற்சி கருவிகள் பல இருப்பது தெரியவந்தது. அவரே ரஜினிகாந்தை சந்திக்க சென்ற போது உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் எனக் கூறியுள்ளார்.

இதனை ரஜினி ரசிகர்கள் பலர் பகிர்ந்து இத்தனை வயதிலும் உடற்பயிற்சி செய்கிறார் பாருங்கள் என்று பேசி வருகின்றனர். முன்னதாக விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஆர்ம்ஸ் தெரிய உடற்பயிற்சி செய்து வந்தார் என்பதும் அது மிகப் பெரிய அளவில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News