சந்திரமுகி 3 ல் ரஜினிகாந்த்? வாசுவோட பிளானே வேற..!

சந்திரமுகி படத்தின் அடுத்த பாகமான சந்திரமுகி 3 உருவானால் அதில் ரஜினிகாந்த் நடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

Update: 2023-09-28 11:30 GMT

சந்திரமுகி 2 படத்துக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், சந்திரமுகி 3 படத்துக்காக ஒரு கதையும் வைத்திருக்கிறார் பி வாசு. அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான திகில் படமான சந்திரமுகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இப்படம் மலையாளத்தில் வெளியான மணிசித்ரதாழு படத்தின் ரீமேக் ஆகும்.

2012 செப்டம்பரில், சந்திரமுகியின் தொடர்ச்சிக்கான திட்டம் இருப்பதாக வாசு அறிவித்தார். இருப்பினும், திட்டம் நிறைவேற பல ஆண்டுகள் ஆனது. ஜனவரி 2020 இல், வாசு அதன் தொடர்ச்சிக்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டதாகவும், ஒரு தயாரிப்பாளர் படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் படத்தின் கதை தயாராகி படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து இன்று ஒருவழியாக ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தின் முடிவில் அடுத்த பாகத்துக்கான தொடர்ச்சியையும் சேர்த்திருக்கிறாராம் பி வாசு.

ரஜினியும் வடிவேலுவும் இணைந்து நடித்த காமெடி டிராக் காட்சிகளை பி வாசு சந்திரமுகி படத்தில் வைத்திருப்பார். அந்த படத்தின் வெற்றிக்கு இந்த காட்சிகள்தான் மிகப் பெரிய அளவில் காரணமாக அமைந்தது. ஆனால் அதையே மீண்டும் முயற்சித்து வடிவேலு - ராகவா லாரன்ஸ் இணையை நடிக்க வைத்த பி வாசு இம்முறை தோற்றுவிட்டார்.

ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) குடும்பத்தில் அடுத்தடுத்து அசம்பாவித சம்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பயத்தில் இருக்கும் அவர் தனது குடும்பம் மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு தங்களுடைய குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிடுகிறார்.

வேட்டைய புரம் அரண்மனைக்கு வரும் ரங்கநாயகியின் பெரிய குடும்பத்தினர் சந்திரமுகி பங்களாவில் தங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்கின்றனர். அங்கு ஏற்கனவே வந்து டரியலான கதாபாத்திரம் முருகேஷனும் இந்த குடும்பத்துடன் இணைகிறார்.

வழக்கம் போல அந்த சந்திரமுகி அறைக்கு யாரும் போகக் கூடாது என்று சொல்ல, அந்த பங்களா குறித்த அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டின் இளம் பெண்களில் ஒருவர் சந்திரமுகி அறைக்கு மீண்டும் செல்ல, இந்த முறை உண்மையான சந்திரமுகியே இறங்கி வந்து ஆடுகிறது. அந்த பேய் யாருக்கும் பயப்படாமல் இருக்க, அப்ப இவர்தான் சரியான ஆள் என வேட்டையனை வரவழைக்கிறார்கள்.

சந்திரமுகி, வேட்டையன் கதையை இன்னும் தேவையான அளவுக்கு மீண்டும் மீண்டும் கொண்டு வர முடியும் அதே நேரம் வேறு வேறு குடும்பங்கள் என்றபடி திரைக்கதையில் வித்தியாசத்தை காண்பிக்க வேண்டும். அதன்படியே வாசு ஒரு கதையை தயாராக வைத்திருக்கிறாராம். சந்திரமுகி 2 படத்தின் ரிசல்டை பொறுத்து அதனை உருவாக்கலாமா வேண்டாமா என முடிவு செய்ய இருக்கிறாராம். முதலில் ரஜினிகாந்திடம் கதையை சொல்லி அவர் நடிக்க மறுத்தால் மட்டுமே வேறு நடிகரைத் தேடிச் செல்வார் என்று கூறப்படுகிறது.

திரும்பவும் ரஜினிகாந்த் மனோதத்துவ நிபுணர் சரவணனாக வருவது போல கதையைக் கொண்டு செல்ல திட்டம் வைத்திருக்கிறார் இயக்குநர். 

Tags:    

Similar News