கண்ணீர் விட்டு அழுத ரஜினி! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணீர் விட்டு அழுததாக, நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Update: 2022-05-19 10:15 GMT

ரஜினிகாந்த்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில், நடிகை பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு, அனிருத் இசை அமைத்துள்ளார்.

டான் திரைப்படத்தில் ஒரு காட்சி.

இந்நிலையில், டான் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இப்படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியதாக தெரிவித்தார்.

படத்தில், கடைசி 30 நிமிடம் தன்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை என்று ரஜினி தெரிவித்ததாக கூறிய சிவகார்த்திகேயன், அவர் எங்களை அழைத்து பாராட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது" என்றார்.

Tags:    

Similar News