இனி ‘ராஜா ராணி 2’ சீரியல் சந்தியா இவர்தான்..
Raja Rani Serial 2 Actress Name-ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்டரில் நடித்த ஆல்யா மானசா விலகியதைத் தொடர்ந்து ரியா விஸ்வநாத் நடித்தார். தற்போது அந்த கேரக்டரில் ஆஷா கௌடா நடிக்க உள்ளார்.;
Raja Rani Serial 2 Actress Name
Raja Rani Serial 2 Actress Name
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா கேரக்டரில் ஆஷா கௌடா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக சீரியல்கள் என்றால் அடிக்கடி 'அவருக்கு பதில் இவர்' என சொல்லி, நடிகர் நடிகைகளை மாற்றி கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் விஜய் டிவியின் சீரியலில் தற்போது நடிகர்களை மாற்றுவது அதிகமாக நடக்கிறது.முதலில் ராஜா ராணி 2 வில் சந்தியா ரோலில் ஆல்யா மானசா, துவக்கத்தில் நடித்து வந்தார். ஆனால் ஆல்யாவுக்கு 2வது குழந்தை பிறந்ததால் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டார். இப்போது அவருக்கு பதில் ரியா தான் சந்தியா ரோலில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து விட்டது. பார்வதி - பாஸ்கர் கல்யாணத்தில் தொடங்கி, தற்போது வரை சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ராஜா ராணி சீரியல், குடும்பக்கதையாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, அந்த சீரியலில் மாமனார், அத்தை, மகன்கள், மருமகள்கள் என, கதைக்களம் குடும்பப் பின்னணியில் இருப்பதால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அத்தையின் கடுமையான கோபத்துக்கு ஆளாகி வரும் சந்தியா, பின்னர் படிப்படியாக அத்தையிடம் நல்ல பெயர் வாங்குவதும், மாமியார் - மருமகள் சண்டை காட்சிகளும் சீரியலை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. முதலில் ஆல்யா மானசா சந்தியா கேரக்டரில் நடித்து, ரசிகர்களை கவர்ந்தார். அவருக்கு பிறகு வந்த ரியா விஸ்வநாத்தும் நல்லவிதமாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியாவாக நடித்து வந்த ரியா விஸ்வநாத், தற்போது வெளியேறி இருக்கிறார். இதற்கான, காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
இனி ராஜா ராணி 2ல் புது சந்தியாவாக நடிகை ஆஷா கௌடா நடிக்க இருக்கிறார். அவர் இதற்கு முன் ஜீ தமிழில், ‘கோகுலத்தில் சீதை’ என்ற தொடரில் நடித்து பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயினை எதற்காக மாற்றினார்கள் என தற்போது ரசிகர்கள், சீரியல் குழுவினரிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். சீரியல்களை பொருத்தவரை, நடிகர், நடிகைகளை அடிக்கடி மாற்றுவது சகஜமாக நடப்பதுதான் என்றாலும், ஒரு கேரக்டரை முழுமையாக ரசிகர்கள் உள்வாங்கிய நிலையில், அடுத்தடுத்து அதே கேரக்டரில் வேறு முகங்களின் நடிப்பை பார்ப்பது, ஒருவிதத்தில் சலிப்பை ஏற்படுத்தும். மாற்றம் செய்யப்பட்ட புதிய நடிகர், நடிகை சிறந்த முறையில் நடித்தாலும், முன்பு நடித்த அவர்போல நடிக்கவில்லையே, என்ற மனக்குறை ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது. எனினும் சந்தியா கேரக்டரில் ஆஷா கௌடா நடிப்பைக் காண ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2