கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன் - யுவன்சங்கர் ராஜா பதிவு
மோடி பற்றி இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா பகிர்வு ட்ரெண்ட் ஆகுது
கருப்பு திராவிடன்; பெருமைக்குரிய தமிழன்!" என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா!
கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன் - யுவன்சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவு. கடந்த 3 நாட்களுக்கு மேலாக மோடி பற்றி இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா பகிர்வு ட்ரெண்டிங் ஆகுது
கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.
நடிகர் விஷால் நடித்து சமீபத்தில் வெளியான 'வீரமே வாகை சூடும்' படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அமைத்த இசை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி நடிகப்பில் மே மாதம் வெளியாகவுள்ள மாமனிதன் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜவுடன் இணைந்து யுவன்சங்கரும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" எனக் குறிப்பிட்டு கருப்பு ஆடை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது