"களவாணி" விமல் மீது தயாரிப்பாளர் கோபி பரபரப்பு புகார்

மன்னர் வகையறா படம் எடுத்தபோது விமல் 5 கோடி ரூபாய் கடனாக பெற்று தற்போது தர மறுக்கிறார் - தயாரிப்பாளர் கோபி புகார்;

Update: 2022-04-20 07:14 GMT

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இருப்பவர் விமல் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வாகை சூடவா, கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றுச்சு (ஆனா அப்பட டெக்னிஷியன்களுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்கலை-ன்னு இன்னிவரைக்கும் முணுமுணுப்பு இருக்கரது தனிக் கதை

ஆனாலும் தற்போது பிசியா இருப்பதா சொல்லிக் கொள்ளும் நடிகராக வலம் வரும் விமல் மீது சென்னை சேர்ந்த தயாரிப்பாளர் கோபி பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளிச்சிருக்கார்.

அதில், மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது நடிகர் விமல், என்னிடம் 5 கோடி ரூபாய் கடனாக வாங்கினார். அந்த பணத்தை வாங்கும்போது படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை இதுவரை திருப்பி வழங்கவில்லை. சமீபத்தில் பணத்தை கேட்டால், திருப்பி வழங்க மறுப்பதோடு, கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். அதனால் நடிகர் விமல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணம் 5 கோடியை வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த புகார் மனுவில் தெரிவிச்சிருக்கார்.


Similar News