'ஆர்' விடுபட்டதால் ஆவேசமான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
Sivakarthikeyan Latest News - பல கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுத்தவர்கள், இந்த பிழையை எப்படி கவனிக்காமல் விட்டார்கள், என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.;
Sivakarthikeyan Latest News -சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'பிரின்ஸ்'. ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதிப் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடல் 'பிம்பிளிக்கி ப்ளாப்பி' நேற்று மாலை வெளிவந்தது. உடனடியாக ரசிகர்களை கவர்ந்து தற்போது யூட்டூப்பில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பாடலில் தவறு
இந்நிலையில், இந்த பாடல் வீடியோவின் துவக்கத்தில் SK - Sivakarthikeyan என்பதற்கு பதிலாக, Sivakathikeyan என்று போடப்பட்டுள்ளது.
அதாவது, Sivakarthikeyan பெயரியில் 'ஆர்' எழுத்தை மறந்துவிட்டுள்ளனர். அந்த எழுத்து பெயரில் விடுபட்டுள்ளது. இந்த பிழையை பார்த்த பலரும், 'இதைக்கூட கவனிக்க மாட்டீர்களா?' என்று படக்குழுவை வெளுத்து வாங்கி வருகிறார்கள். குறிப்பாக, சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், ஆவேசமாக கமெண்ட் செய்து, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது, தற்போது வைரலாகி வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2