திருப்பதியில் பிரபாஸ், கீர்த்தி சனோன்! விரைவில் திருமண செய்தி!
ஆதிபுருஷ் படத்துக்காக திருப்பதி சென்றிருந்த பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரபாஸ் பதிலளித்தார்.;
பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் பிரபாஸ். பாகுபலி படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் எல்லா படங்களும் மிகப் பெரிய பட்ஜெட் படங்களாகவே அமைந்து வருகின்றன. கடைசியாக வெளிவந்த இரண்டு படங்களும் படுதோல்வியை அடைந்தன. இதனால் ஆதிபுருஷ் படத்தை மிகவும் நம்பி இருக்கிறார் பிரபாஸ். அந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கடுமையான கேலியைப் பெற்றுத் தர இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருந்தார் பிரபாஸ்.
ஓம் ராவத் இயக்கும் இந்த படத்தின் கதை ராமாயணத்தை மையமாக கொண்டு உருவானது என்பதால் படத்தின் மீது பெரிய ஆர்வம் எதுவும் இல்லாமலே இருக்கிறது. மேலும் ஒரு சிலர் மட்டும் படத்துக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஆதிபுருஷ் படம் வரும் 16ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் பிரீ ரிலீஸ் ஈவென்ட் திருப்பதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பிரபாஸ் படத்தைப் பற்றியும் படத்தில் பணிபுரிந்தவர்கள் பற்றியும் பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துகொண்டு திரும்பியதையும் அவர் பகிர்ந்துகொண்டார். மாலையில் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபாஸ், இயக்குநர் ஓம் ராவத், நடிகை கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரபாஸ் இந்த நிகழ்வில் அவரது திருமணம் குறித்து பேசினார். அருகில் கீர்த்தி சனோன் இருக்கும்போதே அவர் திருமணத்தைப் பற்றி பேசியது ஏதோ இவருடன்தான் திருமணம் என்பது போல மீடியாக்களில் செய்தி பரவ ஆரம்பித்தது.
எனது கல்யாணம் நிச்சயம் திருப்பதியில்தான் நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கீர்த்தி சனோனுடன் காதல் என செய்திகள் பரவிய நிலையில் அதை கீர்த்தி சனோன் மறுத்துவிட்டார்.