திருப்பதியில் செல்போனை பிடுங்கி வீசிய பிரபல வில்லன் நடிகர் ராணா

Tirupathi, Actor Rana news, Actor Rana latest newsதிருப்பதியில் பிரபல வில்லன் நடிகர் ராணா செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி வீசினார்.;

Update: 2022-09-15 11:26 GMT
நடிகர் ராணா.

Tirupathi, Actor Rana news, Actor Rana latest newsபிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் நடித்தும் பிரபலமானார். பாகுபலி திரைப்படத்தில் இவர் நடித்த பல்வால் தேவன் கதாபாத்திரம் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.

Tirupathi, Actor Rana news, Actor Rana latest newsஇந்த நிலையில் பாகுபலி புகழ் வில்லன் நடிகர் ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. வரிசையில் சாமி தரிசனம் செய்தார். ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்ற போது ஆத்திரம் அடைந்த ராணா அவரின் செல்போனை பிடுங்கி வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Tags:    

Similar News