ஆடியோ உரிமை வர்த்தகத்திலிருந்து வசூல் சாதனையைத் தொடங்கியது 'பொன்னியின் செல்வன்'..!
இயக்குநர் மணிரத்னத்தின் திரைக்காவியமான ''பொன்னியின் செல்வன்' ஆடியோ விற்பனை உரிமை வியாபாரத்தில் சாதனை படைத்துள்ளது.
அண்மையில், சென்னையில் பிரமாண்டமான டிரையிலர் வெளியீட்டு விழாவை நிகழ்த்தி முடித்தது 'பொன்னியின் செல்வன்' படத்தின் தயாரிப்பு நிறுவனம். இதனைத் தொடர்ந்து, படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய் பொருட்செலவில் படத்தை இயக்குநர் மணிரத்னம் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ உரிமையை வாங்குவதற்கு பல்வேறு முன்னணி ஆடியோ நிறுவனங்கள் அனைத்தும் முயற்சித்தன. இதில், டிப்ஸ் நிறுவனம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ உரிமையை, தமிழ்த்திரையுலகில் இதுவரை எந்தப் படமும் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியது இல்லை என்கிற அளவில் வாங்கியுள்ளது.
'பாகுபலி' புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் 'சலார்' படத்தின் ஆடியோ உரிமை 19 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது சாதனையாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சல்மான்கான் நடித்து வரும் ஒரு புதிய படத்தின் ஆடியோ உரிமை 21 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு 'சலார்' படத்தின் சாதனை முறியடிக்கப்பட்டது.
இந்தநிலையில், அவ்விரு படங்களின் சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளி 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ உரிமையை 24 கோடி ரூபாய்க்கு டிப்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம், 'பொன்னியின் சென்வன்' தனது வசூல் சாதனையை தொடங்கிவிட்டது என திரை ஆர்வலர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.