பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்: ரசிகர் கருத்து என்ன?
PS2 Movie Twitter Review-கரிகாலனும், நந்தினியும் சந்திக்கும் காட்சியில் நம்மை மறந்து அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிட வைத்துவிட்டார் மணிரத்னம்.;
பைல் படம்.
முதல் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து வைத்து விட்டதால் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நேராக கதைக்கு வந்துவிட்டார் மணிரத்னம். முடி இளவரசர் ஆதித்த கரிகாலன்(விக்ரம்), நந்தினி (ஐஸ்வர்யா ராய்) இடையேயான காதலை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலனும், நந்தினியும் இளம் வயதில் காதலிக்கும் காட்சிகளுடன் படம் துவங்குகிறது. அதிக வசனம் இல்லாமல் இருவரும் உணர்ச்சிகளாலேயே காதலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களை பிரித்து விடுகிறார்கள்.
அந்த காதலால் தான் கதையில் கடைசி வரை டென்ஷன் அப்படியே இருக்கிறது. கடம்பூர் மாளிகைக்கு வரும்படி அழைப்பு வந்தபோது அது ஏதோ சதி என தெரிந்தும் வர முடியாது என்று ஆதித்த கரிகாலனால் சொல்ல முடியவில்லை.
ஆதரவற்ற பெண்ணான நந்தினி பற்றி எதுவும் தெரியாததால் குந்தவை(த்ரிஷா) எச்சரிக்கையுடன் செயல்படுகிறார். கரிகாலனின் காதலால் தான் தங்கள் மன்னரின் உயிர் போனது என நினைக்கும் பாண்டிய போராளிகள் கரிகாலனை கொலை செய்ய சபதம் எடுக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்கிறார் அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி)
இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் பாதியின் தொடக்கம் இது என்பது தெளிவாகத் தெரிகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அருண்மொழி வர்மனை கொலை செய்ய முயற்சி நடப்பதையும், அதை வந்தியத்தேவன் முறியடிப்பதையும் பார்க்க முடிகிறது. பின்னர் கரிகலானை காட்டுகிறார்கள்.
கரிகாலனும், நந்தினியும் சந்திக்கும் காட்சியில் நம்மை மறந்து அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிட வைத்துவிட்டார் மணிரத்னம். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
கரிகாலன் இறந்த பிறகு வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் குறையத் துவங்கிவிட்டது. கிளைமாக்ஸ் காட்சி தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆதரவற்ற பெண்ணான நந்தினி பற்றி எதுவும் தெரியாததால் குந்தவை(த்ரிஷா) எச்சரிக்கையுடன் செயல்படுகிறார். கரிகாலனின் காதலால் தான் தங்கள் மன்னரின் உயிர் போனது என நினைக்கும் பாண்டிய போராளிகள் கரிகாலனை கொலை செய்ய சபதம் எடுக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்கிறார் அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி)
இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் பாதியின் தொடக்கம் இது என்பது தெளிவாகத் தெரிகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அருண்மொழி வர்மனை கொலை செய்ய முயற்சி நடப்பதையும், அதை வந்தியத்தேவன் முறியடிப்பதையும் பார்க்க முடிகிறது. பின்னர் கரிகலானை காட்டுகிறார்கள்.
கரிகாலனும், நந்தினியும் சந்திக்கும் காட்சியில் நம்மை மறந்து அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிட வைத்துவிட்டார் மணிரத்னம். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் பார்ட் 2 குறித்து டுவிட்டரில் ரசிகர்கள் கூறிய விமர்சனம்:
1. கரிகாலன் இறந்த பிறகு வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் குறையத் துவங்கிவிட்டது. கிளைமாக்ஸ் காட்சி தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
2. முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் 2 ம் பாகம் விறுவிறுப்புடன் இருந்ததாக ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்
3. ஆதித்த கரிகாலனும், நந்தினியும் இளம் வயதில் காதலிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிகவும் தத்ரூபமாக இருந்தது என ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்.