பொன்னியின் செல்வன் 2 படக்குழு வெளியிட்டுள்ள சர்ப்ரைஸ் வீடியோ!

Ponniyin Selvan Ticket Booking Salem -உலக நாயகன் குரலில் மீண்டும் ஒருமுறை பொன்னியின் செல்வன் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் பாகம் 1ன் கதையின் சுருக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

Update: 2023-04-23 10:35 GMT

Ponniyin Selvan Ticket Booking Salem -உலக நாயகன் குரலில் மீண்டும் ஒருமுறை பொன்னியின் செல்வன் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் பாகம் 1ன் கதையின் சுருக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

Full View

வால்நட்சத்திரம் தொடங்கி, கரிகாலன் சொல்கேற்ப வந்தியத்தேவன் சோழ தேசம் புறப்பட்டு சென்று அங்கிருந்து குந்தவையின் ஓலை தாங்கி இலங்கை சென்று பொன்னியின் செல்வனைச் சந்தித்து அங்கிருந்து கிளம்பிய அவர்களை கடல் காவு வாங்குவதாகவும் அதிலிருந்து பொன்னியின் செல்வனை கடல் மாதா ஊமை ராணி காப்பாற்றுவதாகவும் கதை தொடரவிருக்கிறது. இதனை தனது கர்ஜிக்கும் குரலில் அழகாக எடுத்துரைத்தார் உலக நாயகன்.

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மிகச் சிறப்பான முறையில் மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக எடுத்திருக்கிறார். கல்கியின் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அருண்மொழிவர்மன், குந்தவை, நந்தினி, பழுவேட்டரையர்கள் உள்ளிட்ட பலரையும் உருவம் கொடுத்து கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா , ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவிருக்கிறது.

மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா உட்பட பலரும் இந்த படத்துக்கான புரமோசன் பணிகளுக்காக சென்னை, கோவை, மும்பை, ஹைதராபாத், டெல்லி என நாடு முழுக்க பயணித்து வருகின்றனர். 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News