பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு?
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். அதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மிகப் பெரிய வசூலையும் குவித்திருந்தது. இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். அதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மிகப் பெரிய வசூலையும் குவித்திருந்தது. இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின், சோபிதா முன்னணி கதாபாத்திரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமான ரகுமான், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோரும் நடித்து இன்று வெளியாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் பாகம் 2.
கடல் காவு வாங்கிவிட்டதாக கூறப்பட்ட அருண்மொழி வர்மன் திரும்பி வருகிறார் என்பதே படத்தின் துவக்கமாக இருக்கிறது. கமல்ஹாசனின் குரலில் மீண்டும் சோழர்களில் உலகத்தில் நாம் நுழைகின்றோம்.
பொன்னியின் செல்வன் 1 முன்கதை | Ponniyin Selvan 1 story in tamil
வால் நட்சத்திரம் ஒன்று வருவதன் காரணமாக சோழ தேசத்தில் நடக்ககூடாதது நடக்கப்போகிறது. சோழர்களின் அரச குடும்பத்துக்குள்ளேயே பலருக்கு பிரச்னை வரப் போகின்றது என ஜோதிடர் கூற, அதன் காரணமாகத்தான் சோழ குடும்பத்தில் குழப்பங்கள் நிகழ்வதாக பலரும் நம்புகின்றனர்.
சோழ அரசன் நோய்வாய்ப்பட்டிருக்க, அந்த அரியணையை ஏறுவது யார் என்பதன் போட்டியே இந்த கதை. அதில் கரிகாலன் செய்த முன் வினைக்கு பழி தீர்க்க வந்த சதிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும் கொஞ்சம் முன்கதையில் கூறப்பட்டிருக்கிறது.
ஆதித்த கரிகாலன் வடக்கே போரில் பலரை வென்று பல நாடுகளைத் தங்கள் ஆட்சி அதிகாரத்துக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறான். தெற்கே இலங்கையில் இருக்கிறான் அருண்மொழி வர்மன். தனக்கு நாடாள மனமில்லை என்று ஒதுங்கி இருக்கிறான்.
தந்தையின் உடல் நல குறைவால் தங்கள் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் சதிகளை அறிந்து நாட்டையும் பாதுகாக்கும் சோழனின் மகள் குந்தவை அண்ணனையும் தம்பியையும் நாட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறாள். முன்னதாக ஆதித்த கரிகாலனின் சொற்படி மன்னரை சந்தித்து கரிகாலனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்கிறான் வந்தியத்தேவன்.
வந்த இடத்தில் குந்தவையிடம் மனதை பறிகொடுத்த வந்தியத்தேவன், அவளிடம் கொடுத்த வாக்குப்படி இலங்கை சென்று அவளது தம்பியும் அடுத்த அரசனுமான அருண்மொழி வர்மனை அழைத்து வரும் பணயில், சமுத்திரக் குமாரி உதவியுடன் ஈடுபடுகிறான்.
நந்தினி தன் சதியால் பழுவேட்டரையரின் மனதை மாற்றி இளவரசனையே கைது செய்து நாடு அழைத்து வரச் செய்கிறாள். பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சதி செய்து சோழ தேசத்தின் கதையை முடிக்க முயற்சிக்கிறாள்.
இலங்கையில் கைது செய்ய சென்ற இடத்தில் தாங்கள் தவறுதலாக வந்தியத்தேவனை கைது செய்திருப்பதை அறிகின்றனர் அதிகாரிகள். அந்த நேரத்தில் இளவரசைத் தேட அவரோ ஆபத்துதவிகளான பாண்டிய அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளும் வந்தியத்தேவனை மீட்க வருகிறார். இந்த சிக்கலில் கடலுக்குள் விழுகின்றனர் இருவரும். இப்படியாக முதல் பகுதி முடிவடைகிறது.
கதைச் சுருக்கம் | Ponniyin Selvan 2 story in tamil
கடலில் விழுந்த அருண்மொழி வர்மனும் வந்தியத் தேவனும் இறந்துவிட்டதாக தஞ்சைக்கு தகவல் வருகிறது. அரசரும், குந்தவையும் மனம் உடைந்து நிற்கிறார்கள். ஆதித்த கரிகாலன் கோபத்தின் உச்சிக்கே சென்று இதெற்கெல்லாம் காரணம் அந்த நந்தினிதான் என அவளைக் கொன்று தன் தம்பியின் மரணத்துக்கு நியாயம் சேர்க்க படையெடுத்து வருகிறான். வரும் இடத்தில் என்ன நடக்கிறது? நந்தினியின் திட்டம் என்ன? பெரிய பழுவேட்டரையர் என்ன செய்யப் போகிறார்? புதிதாக அரசனாக முயற்சிப்பவர்களுக்கு என்ன ஆனது? உள்ளிட்ட பல விசயங்களை விளக்குகிறது இந்த இரண்டாம் பாகம்.
விமர்சனம் | Ponniyin Selvan 2 padam eppadi irukku
வரலாற்றில் வாழ்ந்த அரசர்கள், இளவரசர்களோடு தன்னுடைய புனைவு கதாபாத்திரங்களையும் இணைத்து இது உண்மையிலேயே வரலாறா இல்லை புனைவா என்றே தெரியாத அளவுக்கு பின்னிப் பிணைந்து தனது நாவலை எழுதியிருக்கிறார் கல்கி. அதனை கிட்டத்தட்ட அப்படியே திரைப்படமாக தந்திருக்கிறார் மணிரத்னம். முதல் பாகத்தில் பல குறைகள் இருந்தாலும் அவை இரண்டாம் பாகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்துக்காகத் தான் வைக்கப்பட்டிருக்கின்றன என்பது நமக்கு புரியும்.
கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதையை எடுத்திருக்கிறார். இதனால் ஹரி பட விரும்பிகள் படத்தை ஸ்லீப்பிங் பில்ஸ் என குதறிக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. என்றாலும் நல்ல கதையை அதன் உண்மைத்தன்மை குறையாமல் நம்பும்படியாக அரசர்களின் காலத்துக்கே அருகாமையில் சென்று பார்க்கும் அளவுக்கு இயக்கியிருக்கிறார் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் படத்தின் மிக மிக முக்கியமான பாசிடிவ் இசைதான். ஒவ்வொரு காட்சியையும் எலிவேட் செய்வதும், அதனை உணர்ச்சிப் பெருக்காக மாற்றுவதும் ஏ ஆர் ரஹ்மானின் மேஜிக். அது என்னவோ ஒரு சில இயக்குநர்களோடுதான் ஏஆர் ரஹ்மான் இதனை உணர வைக்கிறார்.
ஜெயம் ரவிக்கு இந்த பகுதியில் கூடுதல் காட்சிகள் இருப்பதுபோல தெரிகிறது. காரணம் அவர்தான் பொன்னியின் செல்வன். அவரின் நடிப்பும் பிரமாதமாக வந்திருக்கிறது. உண்மையிலேயே அருண்மொழி வர்மனாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் போல இருக்கிறது. முதல் பாகத்திலேயே கலக்கிய கார்த்தி இந்த பாகத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறார். குந்தவையுடனான காட்சிகளில் கார்த்தி நம்மை வியந்து பார்க்க வைத்திருந்தார்.