பிச்சைக்காரன் 2 ஏப்ரல் 14ம் தேதி வெளியீடு
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிச்சைக்காரன் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. பிச்சைக்காரன்-2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பட வெளியீடு குறித்த அப்டேட் இருக்கும் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்.10 ஆம் இப்படத்தின் ஸ்னீக் பீக் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் பிச்சைக்காரன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.