அனல் பறக்கும் டீஸர்... மாஸ் காட்டும் சிம்பு!
பத்து தல டீஸர் வேற லெவலுக்கு வெறித்தனமாக இருக்கிறது.;
கன்னடத்தில் வெர்றி பெற்ற படமான மஃப்டியின் தமிழ் ரீமேக்தான் பத்து தல. இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் மீண்டும் சிம்பு நடித்திருக்கிறார். ஏற்கனவே அக்கறையில நம்ம சத்தம் பாட்டு வேற லெவலுக்கு ஹிட் ஆகியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
யூடியூபில் வெளியிடுவதற்கு முன்னதாகவே ஆன்லைன் டிராக்கர்கள் இந்த பத்து தல டீசரைப் பார்த்துவிட்டார்கள் போல. அவர்கள் டீஸர் வெறித்தனமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சிலம்பரசனின் வசன உச்சரிப்பு மிக அற்புதமாக இருக்கிறதாக கூறுகிறார்கள். அதிலும் அவரின் திரை வெளிப்பாடு அட்டகாசமாக இருக்கிறதாம். டீசரை இங்கு பார்த்து மகிழுங்கள்.