பத்து தலயுடன் மோதும் விடுதலை! யார் ஜெயிக்கப்போறா?

பத்து தல படத்துக்கு முதல் நாளே பல திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு விடும். படம் நன்றாக ஓடினால் அடுத்தடுத்த நாட்களும் பிக்-அப் ஆகிவிடும் என்று கணக்கு போட்டிருக்கிறார்கள்.;

Update: 2023-03-20 14:18 GMT

சிம்புவின் அடுத்தடுத்த பட வெற்றிகளால் ஓடும் குதிரையாக மாறியிருக்கிறார் அவர். மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து இப்போது அவர் நடிப்பில் பத்து தல படம் வெளியாகி பட்டையைக் கிளப்ப காத்திருக்கிறது.


இந்த படத்தின் நாயகனாக சிம்பு புரமோட் செய்யப்பட்டாலும் இந்த படத்தில் அவர் நெகடிவ் கதாபாத்திரமே ஏற்று நடித்துள்ளார். இந்த படமே கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை கதாநாயகனாகக் கொண்டு உருவானதுதான். இருந்தாலும் பட விளம்பரத்துக்காக சிம்புவின் பெயர் பயன்படுத்தப்படுகிறது என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.


பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலும் முக்கியமாக இந்த படமே கௌதம் கார்த்திக்காக பண்ணியிருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறினார். அதுபோல் ரசிகர்களுக்கும் சில விசயங்களைக் கூறியிருந்தார்.


பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு போட்டியாக விடுதலை படம் வந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படமும் பத்து தல படத்துடன் அதே நாளில் வெளியாகுமா என்று எதிர்பார்த்தனர். ஆனால் மார்ச் 31ம் தேதி தான் விடுதலை படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் பத்து தல படத்துக்கு முதல் நாளே பல திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு விடும். படம் நன்றாக ஓடினால் அடுத்தடுத்த நாட்களும் பிக்-அப் ஆகிவிடும் என்று கணக்கு போட்டிருக்கிறார்கள். 

Tags:    

Similar News