தங்கலான் பற்றிய அதிர்ச்சி தகவல் சொன்ன நடிகை!

தங்கலான் படத்தின் நாயகி பார்வதி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.;

Update: 2023-03-11 03:32 GMT

நடிகர் விக்ரம், இயக்குநர் பா ரஞ்சித் இணைந்திருக்கும் படம் தங்கலான். சென்னை, கர்நாடக பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு பின் கேஜிஎஃபிலும் தொடர்ந்தது. பூ பட பார்வதி, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்துக்காக உடல் எடை குறைத்து அதிக மெனக்கெட்டு நடிப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் மற்றொரு நாயகியான மாளவிகா மோகனன் சிலம்பு உள்ளிட்ட பல பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவர்களுடன் பசுபதி உள்ளிட்ட இன்னும் பல நடிகர்கள் தங்களது நடிப்பு திறனைக் காண்பித்து உருவாகி வரும் தங்கலான் திரைப்படம் மே மாத இறுதியில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.


ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ரஞ்சித்தின் நீலம் படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. உண்மைச் சம்பவங்கள் பல இந்த படத்தில் காட்சிகளாக இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

தி பீச், தி பியானிஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனோ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் 1870களில் நடக்கும் கதையைப் பற்றி விவரிக்கிறது. அதற்காக அந்த காலத்தில் கேஜிஎஃப் எப்படி இருந்தது உள்ளிட்டவற்றை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனராம்.


இந்த படத்தில் நடித்தது குறித்து பேசிய பார்வதி, இந்த நாள் வரை இப்படி ஒரு மெனக்கெடல் நிறைந்த படத்தில் நான் நடிக்கவில்லை. ஆக்ஷனுக்கு கட்டுக்கும் இடையில் நாங்கள் ஏதோ ஒன்றை சாதித்த உணர்வு ஒவ்வொரு முறையும் வந்துகொண்டே இருக்கிறது. அது அந்த கால மனிதர்களாகவே நாங்கள் வாழ்ந்ததால் நடக்கிறது என்று பார்வதி கூறியுள்ளார்.

படத்தைப் பற்றி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும் போது ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கிறது. படக்குழுவுக்கும் இயக்குநரை மிகவும் பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. முக்கியமாக நடிகர் விக்ரம், பா ரஞ்சித் உடனான நட்பு துவங்கி இருவரும் நெருக்கமாகி, அவரின் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரும் அளவுக்கு நட்பாகிவிட்டனர் போலும். 

Tags:    

Similar News